பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 595

"பொருளில் வீங்கிய பொச்சைப் புயத்தினான்;
அருளில் வீங்கிய ஆர்கலி மார்பினான்;
தெருளில் வீங்கிய சீர் முகில் கையினான்;
சுருளில் வீங்கிய தோடு அவர்த் தாளினான்.


     "அவன் பொன்னால் அமைந்து சிறந்த சிறுமலை போன்ற தோள்களை
உடையவன்; அருளால் நிறைந்து கடல் போல் பரந்த மார்பை உடையவன்;
தெளிவு நிறைந்த சிறந்த மேகம் போல் கொடை சிறந்த கைகளை
உடையவன்; இதழ்ச் சுருளால் சிறந்த தாமரை மலர் போன்ற கால்களை
உடையவன்.

 
                  68
ஈரஞ் சாம்வரு டத்திரண் டாண்டுளா
னீரெஞ் சாவரு ளானிறை மாட்சியான்
காரஞ் சாவொளி காட்டிய காட்சியான்
சீரெஞ் சாவுரை வெல்லுயர் சீர்த்தியான்.
 
"ஈர் அஞ்சு ஆம் வருடத்து இரண்டு ஆண்டு உளான்;
நீர் எஞ்சா அருளால் நிறை மாட்சியான்;
கார் அஞ்சா ஒளி காட்டிய காட்சியான்;
சீர் எஞ்சா, உரை வெல் உயர் சீர்த்தியான்.

     "அவன் ஈரைந்தால் ஆகும் பத்து வருடத்தோடு இரண்டும் கூட்டிப்
பன்னிரண்டு வயது உள்ளவன்; நல்லியல்பு குன்றாத அருளால் நிறைந்த
மாட்சி உடையவன்; இருளுக்கு அஞ்சாத ஒளியைக் காட்டிய அறிவு
கொண்டவன்; செல்வத்திற் குறைபடாது, புகழுரை எல்லாம் வென்று உயர்ந்த
புகழ் உடையவன்.

     'அஞ்சு' - 'ஐந்து' என்பதன் போலி.

 
                      69
முகத்தின் றாமமு கிழ்ந்தெனப் பார்த்தகா
லகத்தின் றாமரை யுள்ளவிழ் கண்ணினான்
செகத்தின் பாசறை தேய்ந்துள மின்புறச்
சுகத்தின் றாய்வினை துற்றிய வன்பினான்.