பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 596

"முகத்தின் தாமம் முகிழ்ந்து எனப் பார்த்த கால்,
அகத்தின் தாமரை உள் அவிழ் கண்ணினான்;
செகத்தின் பாசறை தேய்ந்து உளம் இன்பு உற,
சுகத்தின், தாய் வினை, துற்றிய அன்பினான்.


     "அவன் தன் முகத்தின் ஒளியைக் கொண்டு மலர்ந்தாற் போல்
பார்த்தவிடத்து, பிறர் தம் மனமாகிய தாமரை உள்ளே மலரச் செய்யும்
கண்களை உடையவன்; தாயின் செயல் போல், உலகத்தின் துன்பங்கள்
தேய்ந்து உள்ளம் இன்புறுமாறு, யாவர்க்கும் சுகத்தை ஊட்டும் அன்பு
கொண்டவன்.

 
                  70
நளிமு கத்தலர் நல்கிய தேனெனா
வளிமு கத்தவன் சொல்லறைந் தாற்பக
லொளிமு கத்திரு ளோடிய வாறுபோல்
விளிமு கத்துறும் வெந்துயர் நீங்குமால்.
 
"நளி முகத்து அலர் நல்கிய தேன் எனா
அளி முகத்து அவன் சொல் அறைந்தால், பகல்
ஒளி முகத்து இருள் ஓடியவாறு போல்,
விளி முகத்து உறும் வெந் துயர் நீங்கும் ஆல்.

     "குளிர்ந்த முகத்தோடு மலர்கள் வழங்கிய தேன் போல, அவன்
கருணை முகத்தோடு ஏதேனும் சொல் தொடுத்தால், பகலவனின் ஒளி
முன்னே இருள் ஓடியது போல், சாவின் முகத்தே வந்து தோன்றும் கொடிய
துயரும் நீங்கும்

 
                       71
உனக்கி சைத்தினி யென்னுரைப் பேனிவண்
டனக்கெ திர்த்திணை தானில னாகையா
னினக்கெ திர்த்துநின் றாலறி வாயென
வெனக்கி யற்றரு டாயிவை சாற்றினாள்.
 
"உனக்கு இசைத்து இனி என் உரைப்பேன்? இவண்
தனக்கு எதிர்த்து இணை தான் இலன் ஆகையால்,
நினக்கு எதிர்த்து நின்றால் அறிவாய்" என,
எனக்கு இயற்று அருள் தாய் இவை சாற்றினாள்.
s