| 76 |
அன்ன தன்மையி
னாற்கிர வாவதே
தென்ன வுண்டியை யீந்தளித் தேனவன்
மன்ன மிர்தம னத்தளித் தாதலால்
முன்ன மன்றுமு கிழ்ந்தென வோங்கினேன். |
| |
"அன்ன தன்மையினாற்கு
இரவு ஆவது ஏது
என்ன, உண்டியை ஈந்து அளித்தேன். அவன்
மன் அமிர்தம் மனத்து அளித்து ஆதலால்
முன்னம் அன்று முகிழ்ந்து என ஒங்கினேன். |
"அத்தகைய
தன்மை உடையவனுக்கு இரக்கும்படியாக நேர்வது
எவ்வாறென்று திகைத்து, உணவை அவனுக்கு அன்போடு கொடுத்தேன்.
அவன் நிலையான அமிழ்தத்தை என் மனத்துள் தந்தமையால் அன்று என்
மனம் மலர்ந்தாற் போல எழுச்சி கொண்டேன்.
| 77 |
அள்ளம் பாடிய
வாசமோ டாடிய
கள்ளம் பாடியை கட்டுரை யாணும் போய்ப்
புள்ளம் பாடிய தொத்தவன் பூமுகம்
விள்ளம் பாடிய வென்விழி பேர்கிலேன். |
| |
"அள் அம்பு ஆடிய
வாசமோடு ஆடிய
கள் அம்பு ஆடு இயை கட்டுரையானும் போய்,
புள் அம்பு ஆடியது ஒத்து, அவன் பூ முகம்
விள் அம்பு ஆடிய என் விழி பேர்கிலேன். |
"இதழ்
செறிந்த அழகிய தாமரை மலருள் அமைந்த மணத்தோடு
கூடிய தேனின் அழகுத் தன்மை பொருந்திய உறுதிச் சொல் கொண்ட
அம்மகன் என்னை விட்டுப் பிரிந்து போயும், அழகிய தாமரை மலருள்
வண்டு மொய்த்தது போல, அவனது தாமரை மலர் போன்ற முகம் சொரிந்த
அழகு நீரில் படிந்து ஆடிய என் கண்களைப் பெயர்க்க மாட்டாதவள்
ஆனேன்.
|