|
கோவிலில்
குழந்தைநாதன்
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா s
| 80 |
கழீஇயின
மணியி லன்னை, களித்திவை யோர்ந்து போகில்
விழீஇயின வுயிரைக் காணா வெய்துறு முடலிற் சூசை
யெழீஇயின நகரிற் சேர்ந்தாங் கெதிர்பட வுயிர்ப்பு வீங்கிக்
குழீஇயின துயர்தீர் பாலற் கொணர்ந்தனை யலையோ வென்றான். |
| |
|
கழீஇயின மணியில்,
அன்னை, களித்து இவை ஓர்ந்து, போகில்,
விழீஇயின உயிரைக் காணா வெய்து உறும் உடலின், சூசை
எழீஇயின நகரிற் சேர்ந்து, ஆங்கு எதிர்பட, உயிர்ப்பு வீங்கி,
"குழீஇயின துயர் தீர்பாலற் கொணர்ந்தனை, அலையோ?" என்றான்.
|
தாயாகிய
மரியாள் இவற்றையெல்லாம் நினைந்து மகிழ்ந்து, ஒளிபெறக்
கழுவட்ட மாணிக்கம் போல் தன் வழியே போகையில், தன்னை விட்டுப்
பிரிந்துபோன உயிரைக் காணாமல் துன்பமடையும் உடலைப் போல், எழுச்சி
கொண்ட அந்நகரப் பகுதியில் சூசை வந்து சேர்ந்து, அங்கு அவள் தனக்கு
எதிரில் வந்து தோன்றவே, பெருமூச்சு விட்டு, "திரண்ட நம் துயரமெல்லாம்
தீர்க்கக்கூடிய சிறுவனைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவில்லையோ?"
என்றான்.
'கழுவின'
என்பது 'கழீஇயின' எனத்திரிந்து அளவெடுத்தது
சொல்லிசை அளபெடை. அவ்வாறே விழுவின, எழுவின, குழுவின
என்பவையும் என்க.
| 81 |
ஆயவை யுரைத்தீங்
குள்ள னாயவற் காணே னென்னத்
தாயவை வருந்திச் சாற்றத் தமனியக் கோயிற் சேர்ந்து
தீயவை துடைக்கு நாதன் செம்மலைக் காட்ட வேண்டி
னோயவ னீப்ப னென்றா னுண்மறை வடிவம் பூண்டான். |
|