83 |
உற்றநூ லூன்றி
நாத னுருவொடுற் றனனோ வென்னப்
பெற்றநூல் தெளியா நீரார் பிதற்றலின் மூன்றா நாளிற்
கற்றநூ லிலநூல் வல்லோன் கற்கவந் தெனச்சேர்ந் தோரொப்
பற்றநூற் படிதா னுற்ற தல்லவென் றறையக் கேட்டான்' |
|
உற்ற நூல் ஊன்றி,
"நாதன் உருவொடு உற்றனனோ?" என்ன,
பெற்ற நூல் தெளியா நீரார் பிதற்றலின், மூன்றாம் நாளில்,
கற்ற நூல் இல நூல் வல்லோன், கற்க வந்து எனச் சேர்ந்து,
ஓர் ஒப்பு
அற்ற நூற் படி, தான் உற்றது அல்ல என்று அறையக் கேட்டான்.
|
பெற்ற
நூலைத் தெளிவாய் உணராத இயல்புல்ல வேத நூல் வல்லார்,
உற்ற அவ்வேத நூலில் ஊன்றி நின்று, "இதன்படி ஆண்டவன் உருவெடுத்து
வந்துள்ளானோ?" என்று தமக்குள் பிதற்றிக் கொண்டிருந்தமையால், கற்ற
நூல் ஒன்றும் இல்லாமலே எல்லா நூல்களிலும் வல்லவனாகிய
குழந்தைநாதன், மூன்றாம் நாளில், தானும் வேத நூல் கற்க வந்தாற்போல்
அவர்களோடு சேர்ந்து, ஒப்பற்ற ஒரே வேத நூலிற் கண்டபடி, தான்
அவதரித்து வந்துள்ளதை அல்லவென்று சொல்லக் கேட்டான்.
அன்று
என்பது அல்ல என்று வந்தது ஒருமைப் பன்மை மயக்கம்.
84 |
கேட்டலு மிரங்கி
யன்னார் கிளந்தவை மறுத்து நீக்க
வேட்டலுந் தன்னைக் காட்டா மெல்லிசை யிரங்கு நல்யாழ்
கூட்டலுங் கனிபால் மற்றக் குளுஞ்சுவை திரட்டிக் காதி
லூட்டலு மனைய தீஞ்சொல் லோரென்பா னோத லுற்றான். |
|
கேட்டலும் இரங்கி,
அன்னார் கிளந்தவை மறுத்து நீக்க
வேட்டலும், தன்னைக் காட்டா, மெல் இசை இரங்கு நல்யாழ்
கூட்டலும், கனி பால் மற்றக் குளும் சுவை திரட்டி, காதில்
ஊட்டலும் அனைய தீம் சொல், ஓர் என்பான், ஓதல் உற்றான்
|
|