'ஈராறு'
என்பது, 'ஈரறு' எனக் குறுக்கல் விகாரமாயிற்று. 'வெயில்'
பகலுக்கு ஆகு பெயர். 'காட்சி' முன் காட்சிப் படலத்துக் குறித்த பிறப்புக்
காட்சி.
86 |
வான்றந்த
நன்னர் வானமே காட்ட வழுக்கில நாவென
நவமீன்
றான்றந்த நிலைமூ வரசர்கண் டெழுந்து தரணிகாப்
பவனைவந் திறைஞ்ச
மீன்றந்த வழிவந் தெவணவ னென்ன விளங்கிய பெத்திலந்
தன்னி
லூன்றந்த வுருவோ டீங்குதிப் பவனென் றுரைத்தது நீரன்றோ
வென்றான். |
|
"வான் தந்த
நன்னர் வானமே காட்ட வழுக்கு இல நா என நவ
மீன்
தான் தந்த நிலை மூ அரசர் கண்டு எழுந்து, தரணி காப்பவனை
வந்து
இறைஞ்ச,
மீன் தந்த வழி வந்து, 'எவண் அவன்?' என்ன, 'விளங்கிய
பெத்திலம்
தன்னில்
ஊன் தந்த உருவோடு ஈங்கு உதிப்பவன்' என்று உரைத்தது நீர்
அன்றோ?'
என்றான். |
"வானுலகம்
தந்த நன்மையை அவ்வானமே காட்டுவதற்கென்று
அமைந்த தவறில்லாத நாவைப் போல், ஒரு புதிய விண்மீன் தானாக
அறியத் தந்த நிலையைக் கண்டு மூன்று அரசர்கள் புறப்பட்டு,
இவ்வுலகத்தை மீட்டுக் காப்பவனை நேரில் வந்து வணங்கும் பொருட்டு,
அவ்விண்மீன் நகர்ந்து காட்டிய வழியே வந்து, 'அவன் எங்கே
பிறந்துள்ளான்?' என்று வினவ, 'அவன், விளங்கிய பெத்திலேம் ஊரில்
ஊனுடல் கொண்ட உருவத்தோடு இவ்வுலகில் வந்து தோன்றுவான்' என்று
சொல்லியது நீங்களே அல்லவா?" என்றான்.
87 |
கான்முகத்
தலர்ந்த மதுமலர் வடிவோய் களிப்பநீ
யுரைத்தவை நாமோர்ந்
தூன்முகத் தெந்தை யுற்றதென் றைய முற்றன மாயினும்
வேத
நூன்முகத் தரச ரிறைஞ்சவந் தெங்கு நுதல்வரு மாண்மையி
லாள்வான்
வான்முகத் திறைவ னென்றதாய்ந் தல்லோ வந்ததன்
றென்றன மென்றார். |
|