"கான் முகத்து
அலர்ந்த மது மலர் வடிவோய், களிப்ப நீ
உரைத்தவை நாம் ஓர்ந்து,
ஊன் முகத்து எந்தை உற்றது என்று ஐயம் உற்றனம் ஆயினும்,
வேத
நூல் முகத்து, 'அரசர் இறைஞ்ச வந்து, எங்கும் நுதல்வு அரும்
ஆண்மையில் ஆள்வான்,
வான் முகத்து இறைவன், என்றது ஆய்ந்து அல்லோ, வந்தது
அன்று என்றனம்?' என்றார். |
"மணத்தோடு
மலர்ந்த தேனுள்ள மலர் போன்ற வடிவம் உடையவனே,
மகிழுமாறு நீ சொன்னவற்றை நாங்களும் உணர்ந்து, எம் தந்தையாகிய
ஆண்டவன் ஊனுடலோடு வந்துள்ளானென்று ஐயம் கொண்டோமாயினும்,
வேத நூலில், 'வானுலகிலுள்ள ஆண்டவன் அரசர்கள் தன்னை வணங்க
வந்து தோன்றி, கருதுதற்கரிய வல்லமையோடு எங்கும் ஆள்வான்.' என்று
கூறியுள்ளதையும் ஆராய்ந்தல்லவா, அவன் வந்து தோன்றவில்லை
என்றோம்?" என்றனர் அவ்வேத வல்லுநர்.
88 |
சொல்லிய
தன்மைத் தன்றியு மன்னான் றுறுந்துயர்க் கடையிலன்
மிடியே
புல்லிய தன்மைத் துறவில னசைசெய் பொருளிலன் மனையில
னுலகி
லொல்லிய தன்மைத் தெளியனாய்த் தோன்றி யொருமரத் திறப்பதவ்
வேதத்
தில்லிய தன்மைத் துளதன்றோ வென்றா னிளமுகத் தனாதியா
னன்றே.
|
|
"சொல்லிய தன்மைத்து
அன்றியும், அன்னான் துறும் துயர்க் கடை
இலன்,
மிடியே
புல்லிய தன்மைத்து உறவு இலன், நசை செய் பொருள் இலன்,
மனை
இலன், உலகில்
ஒல்லிய தன்மைத்து எளியனாய்த் தோன்றி, ஒரு மரத்து இறப்பது,
அவ்
வேதத்து
இல்லிய தன்மைத்து உளது அன்றோ?" என்றான், இளமுகத்து
அனாதியான்
அன்றே. |
இளமையான
முகத் தோற்றத்தோடு நின்ற, தொடக்க மற்றவனாகிய
திருமகன் அவர்களை நோக்கி, "நீங்கள் சொல்லிய தன்மை
கொண்டிருப்பதும்
|