பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 607

அல்லாமல், அவன் தன்மேல் வந்து குவியும் துன்பங்களுக்கு முடிவு
இல்லாதவனாய், வறுமையே பொருந்திய தன்மையோடு தனக்கு உறவினரும்
இல்லாதவனாய், ஆசையைத் தூண்டும் செல்வமும் இல்லாதவனாய், வீடும்
இல்லாதவனாய், இவ்வுலகில் இயன்ற அளவிற்கு எளியவனாய்த் தோன்றி,
இறுதியில் ஒரு மரத்தில் இறப்பான் என்பதும், அவ்வேதத்தில் இடம் பெற்ற
தன்மையாய் உள்ளதன்றோ?" என்றான்.

     'அன்றே' என்பது அசைநிலை.

 
                          89
வேறுபட் டெதிர்த்த மாற்றமொன் றாக வெளிற்றிளஞ்
                          சொல்லொரு வீரே
லீறுபட் டனைத்துங் கற்றவர் சொன்ன தியம்புது
                          மெனத்தொழு துரைப்பான்
மாறுபட் டழிந்த மனுக்குலத் தறநூல் வகுத்தளித் துற்றபின்
                          னுலக
நீறுபட் டிடுநாட் பயன்றர வருவா னிமலனென் றதுமறை
                          யன்றோ.
 
"வேறு பட்டு எதிர்த்த மாற்றம் ஒன்று ஆக, வெளிற்று இளஞ்சொல்
                                   ஒருவீரேல்,
ஈறு பட்டு அனைத்தும் கற்றவர் சொன்னது இயம்புதும்" என,
                                   தொழுது உரைப்பான்:
"மாறு பட்டு அழிந்த மனுக் குலத்து அற நூல் வகுத்து அளித்து
                                   உற்ற பின், உலகம்
நீறு பட்டிடும் நாள் பயன் தர வருவான், நிமலன், என்றது மறை
                                   அன்றோ?

     "அறிவின்மை சார்ந்த இம் முதிராத சொல்லை நீங்களே அறிந்து
விலக்கிக்கொள்ள மாட்டீராயின், தமக்குள் வேறுபட்டு எதிராகத் தோன்றும்
நம் இருவர் சொல்லும் ஒரு தன்மை உள்ள தாகும்படி, யாவற்றையும்
முடிவுறக் கற்றவர் சொன்னதை எடுத்துச் சொல்வோம்" என்று, அவர்களைத்
தொழுது திருமகன் பின்வருமாறு உரைப்பான்: 'வேதநூல், குற்றமற்ற
ஆண்டவன், தன் திருவுளத்தோடு மாறுபட்டு அழிவுக்கு ஆளாகிய மனித
குலத்திற்கு அற நூலை வகுத்துக் கொடுத்து முதலில் மனிதனாய் வந்த பின்,
உலகம் எரிந்து சாம்பலாகும் நாள் அம்மனிதர்க்குத் தக்க பயன் தருமாறு
முடிவில் வருவானென்று கூறியுள்ளதன்றோ?