90 |
படிமுடித் தெவர்க்கும்
பயன்றர வருங்காற் பரமனீர்
சொல்லிய வண்ணத்
திடியிடித் தெரிந்த விசும்பெலா முழங்க வெங்கணும்
வெருவினை வீசக்
கொடிபிடித் தமரர் முன்னமற் றெவருங் குழைந்துசூ
ழிறைஞ்சவா னரசாய்க்
கடிதிடித் தெரிகா ராசனத் தெழுந்து கதிர்முகத் தியல்வது
நன்றே. |
|
"படி முடித்து,
எவர்க்கும் பயன் தர வருங் கால், பரமன், நீர்
சொல்லிய
வண்ணத்து,
இடி இடித்து எரிந்த விசும்பு எலாம் முழங்க, எங்கணும்
வெருவினை
வீச,
கொடி பிடித்து அமரர் முன்ன, மற்று எவரும் குழைந்து சூழ்
இறைஞ்ச,
வான் அரசாய்,
கடிது இடித்து எரி கார் ஆசனத்து எழுந்து, கதிர் முகத்து
இயல்வது
நன்றே. |
"ஆண்டவன்,
இவ்வுலகத்தை அழித்து, எல்லோருக்கும் அவரவர்
வாழ்க்கைக்கு ஏற்ற பயன்தர வரும் அக்காலத்தில், நீங்கள் சொல்லியபடியே,
இடி இடித்து மின்னலோடு எரிந்த வான மெல்லாம் முழங்கவும், எங்கும்
அச்சத்தைப் பரப்பவும், கொடி பிடித்து வானவர் தனக்கு முன்னே
செல்லவும், மற்ற யாவரும் குழைந்து சுற்றிலும் வணங்கி நிற்கவும், தான்
வானுலக அரசனாய், கடுமையாக இடித்து மின்னலால் எரியும் மேகமாகிய
ஆசனத்தில் அமர்ந்து, ஒளி வீசும் முகத்தோடு வந்து தோன்றுவது நலமாம்.
91 |
ஒளிபொரு
ளின்பம் வெஃகிய வினையா லுயிர்கெட நுழைந்ததீ
தொழிப்ப
விளிபொரு ளிவையென் றெளிமையே பொறையே வெறுமையே
மெய்த்திரு வென்னத்
தெளிபொருள் மறையாய்ப் பயிற்றவந் தவன்றான் றிருவெறுத்
தெளியனுற் றெவர்க்கு
நளிபொரு ளோதல் தயைத் தளிர்தளிப்ப நண்ணுங்கா
லுரிதன்றோ வென்றான். |
|