பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 609

"ஒளி பொருள் இன்பம் வெஃகிய வினையால் உயிர் கெட நுழைந்த
                                   தீது ஒழிப்ப,
விளி பொருள் இவை என்று, எளிமையே பொறையே வெறுமையே
                                   மெய்த் திரு என்ன,
தெளி பொருள் மறையாய்ப் பயிற்ற வந்தவன் தான் திரு வெறுத்து,
                                   எளியன் உற்று, எவர்க்கும்
நளி பொருள் ஓதல், தயை தளிர்த்து அளிப்ப நண்ணும் கால், உரிது
                                   அன்றோ? என்றான்?


     "புகழையும் செல்வத்தையும் இன்பத்தையும் விரும்பிய செயலால் மனித
உயிர்கள் கெடுமாறு நுழைந்த பாவத்தை ஒழிக்கும் பொருட்டு,
இவையெல்லாம் அழியும் பொருள்கள் என்றும், எளிமையும் பொறுமையும்
வெறுமையுமே உண்மையான செல்வங்கள் என்றும், தெளிந்த பொருளை
வேதமாய்க் கற்பிக்க வந்தவன், தயவினால் தளிர்த்து மீட்டுக் காக்க அணுகி
வரும் காலத்து, தானும் அச்செல்வங்களை வெறுத்து, எளியவனாய் நின்று,
யாவர்க்கும் செறிவான பொருளை எடுத்துக் கூறுதல் உரியதே அன்றோ?"
என்றான்.

     தான் சொல்ல வந்த அறநெறி தனது வாழ்க்கையிலும் அமைந்து
கிடத்தலே பொருத்தமென்பது கருத்து..

 
                                       92
இத்திறத் தெதிர்த்த கதைகள் பொருந்தி யெய்திய நவங்கள்கண்
                                    டளிப்ப
மெய்த்திறத் திறைவன் பிறந்தன னென்னில் வெளிறதோ
                                    வென்றனன் பால
னத்திறத் தெவருந் தாந்தமை நோக்கி யதிசயித் தெவர்மக
                                    னெவ்வூ
ரெத்திறத் துரிய குலத்தனீ யென்றா ரிளவலு மறைவுறச்
                                    சொன்னான்.
 
"இத் திறத்து, எதிர்த்த காதைகள் பொருந்தி, எய்திய நவங்கள் கண்டு
                                        அளிப்ப
மெய்த்திறத்து இறைவன் பிறந்தனன் என்னில், வெளிறு அதோ?"
                                        என்றனன் பாலன்.
அத் திறத்து, எவரும் தாம் தமை நோக்கி அதிசயித்து, "எவர் மகன்?
                                        எவ் ஊர்?
எத் திறத்து உரிய குலத்தன் நீ?" என்றார், இளவலும் மறைவு உறச்
                                        சொன்னான்: