பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 61

''கடல் வண்ணத்து அமுதே, கதி வாயிலே
உடல் வண்ணத்து ஒளியே, உயிரே, உயிர்க்கு
அடல் வண்ணத்து அணியே, அருளே!'' எனா
மடல் வண்ணத்து அலர்த்தாளை வணங்கினார்.


      ''கடல் அளவாகப் பரந்த அமுதம் போன்றவனே, மோட்ச கதிக்கு
வாயிலாய் அமைந்தவனே, உடல் அமைப்புக்களில் ஒளியாய் நிற்பவனே,
உடல்களுக்கெல்லாம் உயிரானவே, உயிர்களுக்கெல்லாம் வலிமை மயமான
அணிகலன் போன்றவனே, அருள் வடிவானவனே!''
என்று மரியாளும்
சூசையும் திருமகனின் இதழ் விரிந்த வண்ண மலர் போன்ற திருவடியை
வணங்கினர்.

 
               99
வில்லின் மாரியின் விண்ணவர் நின்றிசைச்
சொல்லின் மாரியின் றூய்புகழ் பாடியுஞ்
செல்லின் மாரியிற் றேன்மலர் சிந்தியு
மெல்லின் மாரியி னொள்ளடி யேத்தினார்.
 
வில்லின் மாரியின் விண்ணவர் நின்று, இசைச்
சொல்லின் மாரியின் தூய் புகழ் பாடியும்,
செல்லின் மாரியின் தேன் மலர் சிந்தியும்,
எல்லின் மாரியின் ஒள் அடி ஏத்தினார்.

      அப்பொழுது, வான வில்லின் தொகுதிபோல் வானவர்கள்
வானத்தில் திரண்டு நின்று, இசையோடு கூடிய சொல்மாரியால் திருமகனின்
தூய புகழைப் பாடியும், மேகத்தாற் பொழியும் மழைபோல் தேன் நிறைந்த
மலர்களைச் சொரிந்தும், பகலவனின் கதிர்த் தொகுதி போன்று ஒளியுடன்
விளங்கிய பாதத்தைப் போற்றினர். மாரி என்ற மழையின் பெயர் இங்கு
மழை போன்று திரண்டு பரந்து காணும் தொகுதியைச் சுட்டி நின்றது.

 
                 100
நாத னன்றியு நாதன்றெ ரிந்ததன்
தூத னென்ற கருணையன் றுஞ்சிலா
தாத லன்பெழுந் தாங்கவர் கண்டடை
சீத வின்பியல் பீங்கினிச் செப்புவாம்.