பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 611

     'உற்று' என்பது 'உறீஇ' எனத் திரிந்து சொல்லிசை அளபெடை
ஆயிற்று.

                     பிரிந்தவர் கூடல

     விளம், - விளம், - மா, கூவிளம்

 
                             94
தப்படு முரையுணர்ந் தெவருஞ் சாய்ந்துபோய்
வெப்படும் வேலையாய்த் தாயு மெய்யனு
மொப்படு மொளிமணி பதித்த வொண்டுகிர்ச்
செப்படுஞ் சிறுவனைச் சென்று நோக்கினார்.
 
தப்பு அடும் உரை உணர்ந்து எவரும் சாய்ந்து போய்,
வெப்பு அடும் வேலை ஆய், தாயும் மெய்யனும்,
ஒப்பு அடும் ஒளி மணி பதித்த ஒண் துகிர்ச்
செப்பு அடும் சிறுவனை, சென்று, நோக்கினார்.

     தவறுகளைப் போக்கும் குழந்தைநாதனின் சொற்களை உணர்ந்து
யாவரும் விலகிப் போகையில், தம் துன்பத்தைப் போக்கும் காலம் வந்து
அடுக்கவே, தாயாகிய மரியாளும் உண்மையாளன் சூசையும் கோவில்
சென்று, ஒப்புமை போக்கும் ஒளியுள்ள மணிகள் பதித்த ஒளி கொண்ட
பவளச் செப்பை வெல்லும் சிறுவனை அங்குக் கண்டனர்.

 
                   95
எல்லொளி படமலர் கஞ்ச மேயென
வில்லொளி முகத்துமுன் விண்ட லர்ந்துள
மல்லொளி படத்துளி யளித்த காந்தம்போற்
செல்லொளி விமியினா ரழுது சேர்கின்றார்.
 

எல் ஒளி படமலர் கஞ்சமே என,
வில் ஒளி முகத்து முன் விண்டு அலர்ந்து உளம்,
அல் ஒளி படத் துளி அளித்த காந்தம் போல்
செல் ஒளி விழியினார் அழுது சேர்கின்றார்.


     பகலவனின் ஒளி பட்டதும் மலரும் தாமரையேபோல், வில்லொளி
வீசும் திருமகன் முகத்தின்முன் தம் உள்ளம் திறந்து மலர்ந்து, இரவில்
ஒளிதரும் மதி தோன்றியதும் நீர்த்துளி பிறப்