பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 612

பிக்கும் சந்திரகாந்தக் கல்லைப் போல, மேகத்தில் தோன்றும் மின்னலொளி
போன்ற கண்களைக் கொண்ட அவ்விருவரும் அழுது, அம்மகனைக்
கிட்டுகின்றனர்.

     'அல் ஒளி' என்பது, 'அல்லில் ஒளிதரும் மதி' என விரிய நின்ற
அன்மொழித் தொகை.

 
               96
சுனையனை விழிவிடா தொடுத்த நீரினா
னனையனை முழுமெயு நனைப்ப வன்னவர்
புனையனை யன்புயிர் புணர்ந்தொன் றாகவுந்
தனையனை முறைமுறை தழுவி னாரரோ.
 

சுனை அனை விழி விடா தொடுத்த நீரினால்
நனை அனை முழு மெயும் நனைப்ப, அன்னவர்,
புனை அனை அன்பு உயிர் புணர்ந்து ஒன்று ஆகவும்
தனையனை முறை முறை தழுவினார் அரோ.


     அவ்விருவரும், ஊற்றுப் போன்ற தம் கண்ணினின்று விடாது
பொழிந்த கண்ணீரால் பூவரும்பு போன்ற முழு உடலும் நனையுமாறும்,
கட்டப்பட்டதுபோல் தம் அன்பும் உயிரும் அவன் அன்போடும் உயிரோடும்
சேர்ந்து ஒன்றாகு மாறும், அத்திருமகனே ஒருவர் பின் ஒருவராய் முறையே
தழுவிக் கொண்டனர்.

     'தனயன்' என்பது, எதுகை நோக்கி, 'தனையன்' எனத் திரிந்தது.

 
                 97
கற்றைநாண் முகத்தினோய் பிரிந்த காரணத்
தற்றைநா ளாதியா யுயிரற் றாகுலித்
திற்றைநா நுகரநீ யிரங்கி லாயதேன்
மற்றைநா ளொன்றினாம் வாழ வோவென்றாள்.
 
 "கற்றை நாண் முகத்தினோய், பிரிந்த காரணத்து,
அற்றை நாள் ஆதியாய் உயிர் அற்று ஆகுலித்து,
இற்றை நாம் நுகர, நீ இரங்கு இல் ஆயது ஏன்?
மற்றை நாள் ஒன்றின், நாம் வாழவோ?" என்றாள்.