மரியாள்,
"கதிர்த்திரள் நாணும் முகங் கொண்டவனே, நீ பிரிந்த
காரணத்தால், அந்நாள் முதல் உயிரற்றவராய் வருந்தி, இத்துயரமெல்லாம்
இன்றுவரை நாங்கள் அனுபவிக்க, நீ இரங்குதல் இல்லாதவனாயது ஏன்?
மறுநாளும் இப்பிரிவு நீடிக்குமாயின், நாங்கள் வாழ இயலுமோ?" என்றாள்.
அன்றை,
இன்றை வலித்தல் விகாரம் பெற்றது, எதுகைபற்றி என்க.
98 |
பட்டவை யறிந்தினைந்
தேனும் பற்றெலா
மட்டவை புதைத்தென வருளி யெந்தைதான்
சுட்டவை செயேன் கொலோ வென்று சொன்னபின்
னட்டவை யோம்புநீ ரெனநட் பூட்டினான். |
|
பட்டவை அறிந்து
இனைந்தேனும், பற்று எலாம்
அட்டு அவை புதைத்து என, "அருளி எந்தை தான்
சுட்டு அவை செயேன் கொலோ?" என்று சொன்ன பின்,
நட்டவை ஓம்பும் நீர் என, நட்பு ஊட்டினான். |
அவர்கள்
பட்ட துன்பங்களைத் தானும் அறிந்து வருந்தினானாயினும்,
பற்றுக்களையெல்லாம் அழித்து, அவற்றைப் புதைத்தாற் போல, "என்
தந்தையாகிய கடவுள் தானே அருள் கூர்ந்து சுட்டிக் காட்டிய அவற்றை
நான் செய்யாதிருப்பேனோ?" என்று திருமகன் முதலிற் சொல்லியபின், நட்ட
பயிர்களைப் பேணும் மழைத் துளி போல, தன் நட்பைக் காட்டி இன்பம்
ஊட்டினான்.
'சுட்டவை'
என்பது தொகுத்தல் விகாரம்.
99 |
மருவணி மலர்மழை
வாரி யாழ்குழல்
வருவணி யிசையொடு மதுர வாய்க்குர
லுருவணி யும்பர்சூ ழுவந்து பாடிவான்
றெருவணி விழாவருஞ் சிறப்பில் வாழ்த்தினார். |
|
மரு அணி மலர்
மழை வாரி, யாழ் குழல்
வரு அணி இசையொடு, மதுர வாய்க் குரல்
உரு அணி உம்பர், சூழ் உவந்து பாடி, வான்
தெரு அணி விழா அருஞ் சிறப்பில் வாழ்த்தினார். |
|