பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 618

வானவர் ஒளியைப் பரப்பினர். அவ்வொளி இயங்குமிடமெல்லாம் துலங்கித்
தோன்றும் மண்ணுலகின் தன்மை, ஞாயிறு இயங்குகையில் துலங்கித்
தோன்றும் வானுலகின் தன்மையை ஒத்திருந்தது.

 
              6
உளரி யங்கொலி யோதியு லாவுவிண்
ணுளரி யங்கொளி சோதி யொளியெனா
விளரி பங்கய மாலையில் விள்ளவே
விளரி பங்கய மாலையில் விள்ளுமால்.
 
உளரி அங்கு ஒலி ஓதி உலாவு விண்
உளர் இயங்கு ஒளி சோதி ஒளி எனா,
விளரி பங்கயம் மாலையில் விள்ளவே,
விளரி இபம் கய மாலையில் விள்ளும் ஆல்.

     அங்கு யாழைத் தடவியும் வாயொலியாகப் பாடியும் உலாவும்
வானவரிடமிருந்து புறப்படும் ஒளியைப் பகலவனின் ஒளியென்று மயங்கி,
மாலை வேளையில் மிகுதியான தாமரை மலர்கள் விரியவே, வெளிறிய
மரக்கொம்புகளும் பெரிய மாலை போல் மலர்களை விரித்து நிற்கும்.

     வானவர் பரப்பிய ஒளி மிகுதியால் மரக்கிளைகள் வெளிறித்
தோன்றின.

 
                 7
கைப்ப டங்கம ருந்தகக் காந்தனுங்
கைப்ப டங்கம ருந்தகக் காந்தையுஞ்
செப்ப டங்கவி ருந்தவச் சேடனுஞ்
செப்ப டங்கவி ருந்தனர் சேடியே.
 
கைப் படங்கு அமரும் தகக் காந்தனும்,
கைப்பு அடங்க மருந்து அகக் காந்தையும்,
செப்பு அடங்க இருந் தவச் சேடனும்,
செப்பு அடங்க இருந்தனர் சேடியே.

     ஒழுக்கம் கூடாரமடித்துத் தங்கும் தகுதி வாய்ந்த தலைவனாகிய
குழந்தை நாதனும், துன்பத்தின் கசப்பு அடங்க மருந்தாய் உதவும் உள்ளங்
கொண்ட மனைவியாகிய மரியாளும், உரையால் சொல்லி முடியாத பெரிய