பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 619

தவமுடைய சூசையும், தங்கள் பயணம் அடங்க இடையர் வீதியில் அன்றிரவு
தங்கியிருந்தனர்.

     வழியைக் குறிக்கும் 'செப்பம்' என்ற சொல், 'செப்பு' எனக்
கடைக்குறையாய் நின்று, ஆகு பெயராய், பயணத்தைக் குறித்தது.

 
                        8
தீத்தன் பள்ளியை நீத்தெழீஇ செய்துயிற்
றீத்தன் பள்ளியை நீத்தெழிற் சேயுயிர்த்
தீத்தன் கைபணி யப்படி சேர்ந்தகாற்
றீத்தன் கைபனி யப்படி சேர்ந்தவே.
 
தீ தன் பள்ளியை நீத்து எழிஇ, செய் துயில்
தீத்து, அன்பு அள்ளி, ஐ நீத்து எழில் சேய், உயிர்த்
தீத்தன், கை பணியப் படி சேர்ந்த கால்,
தீ தன் கை பனியப் படி சேர்ந்தவே.

     ஞாயிறு தன் படுக்கையை விட்டு எழுந்து, தன் துயிலைப் போக்கி,
அன்பை அள்ளிக் கொண்டு, மற்றைய அழகெல்லாம் விலக்கித் தனிப்பட்ட
அழகுடன் விளங்கும் மகனும் உயிர்களுக்கெல்லாம் குருவாக
அமைந்தவனுமாகிய குழந்தை நாதனின் கைகளைப் பணியவென்று
இம்மண்ணுலகை அடைந்தபோது, தன் கைகளாகிய கதிர்கள் சுடுந்
தீயென்பதால் அவை குளிரும்படி தரை சேர்ந்தன.

     முதலடியில் 'தீ' கதிரவனுக்கு உவமையாகு பெயர். 'தீர்த்து' என்பது,
'தீத்து' எனவும், 'தீர்த்தன்' என்பது, 'தீத்தன்' எனவும் எதுகை நோக்கித்
திரிந்தன.

 
           9
ஈர நீரவி ழத்துண ரேவரை
யீர நீரவி ழத்திரை யேவனத்
தீர நீரவெ ழச்சிகி யேயறத்
தீர நீரரெ ழீஇத்தட மேகினார்.
 
ஈர நீர் அவிழத் துணரே, வரை
ஈர நீர விழத் திரையே, வனத்து
ஈர நீர எழச் சிகியே, அறத்து
ஈர நீரர் எழீஇ, தடம் ஏகினார்.