பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 622

எரி மணிப் புகை எடுத்தனர்; மலர் மழை பொழிந்தார்;
அரி மணிக் குரல் யாழ் எடுத்து உளர்ந்து இசை ஏற்றி,
உரி மணிக் குரல் ஒருப்படப் பா இசை கூட்டி,
விரி மணிக் கதிர் விண் திரு விழாவினை விளைத்தார்.


     அவ்வானவர் நெருப்பினின்று எழும் அழகிய நறும் புகை காட்டினர்;
மலர்களை மழையாகப் பொழிந்தனர்; வரிசை அழகுடன் அமைந்த குரல்
முதலாகத் தொடங்கும் நரம்பு கொண்ட யாழை எடுத்துத் தடவி இசையைப்
பிறப்பித்தும், தமக்கே உரிய மணிக் குரலால் ஒன்றாகச் சேர்ந்து
இசைப்பாடல்களைப் பாடியும், விரிந்த அழகிய கதிரொளி கொண்ட
வானுலகிற்குரிய திருவிழாவை இம் மண்ணுலகில் நடத்திக் காட்டினர்.

 
                             14
வினைவி ளைத்தன வெப்பறக் குளுமுகத் துதித்தோன்
றனைவி ளைத்தன தயைவழி யளவறப் புகழ்ந்து
கனைவி ளைத்தன களிப்பிலோ ராயிர நாம
நினைவி ளைத்தன நெறிவருங் கனிநய மளவோ.
 
வினை விளைத்தன வெப்பு அறக் குளு முகத்து உதித்தோன்
தனை, விளைத்தன தயை வழி அளவு அறப் புகழ்ந்து,
கனை விளைத்தன களிப்பில், ஓர் ஆயிர நாமம்,
நினைவு இளைத்தன நெறி வரும் கனி நயம் அளவோ?

     பாவ வினை விளைவித்த வெப்பம் நீங்குமாறு குளிர்ந்த முகத்தோடு
அவதரித்து வந்த ஆண்டவனை, அவன் விளைத்த தயவின் வழி நின்று
அளவில்லாது புகழ்ந்து, அவன் ஆயிரம் பெயர்களை ஒசையோடு
எடுத்துக்கூறிய களிப்பினிடையே, கேட்டோர் அவற்றை நினைவிற் கொள்ள
இயலாது இளைத்து நின்ற விடத்துப் பிறக்கும் கனிவான இன்பத்திற்கு
எல்லையும் உண்டோ?

             சூசையின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்

 
                      15
முருகு வாய்ச்சுளை முட்புறக் கனியொடு பூங்கா
வருகு வாய்க்கனி பலவுமூழ்த் தளித்ததீந் தேனு
முருகு வாயிறா லுடைந்துமிழ் தேனுமார்ந் தொழுகிப்
பெருகு வாய்ப்புனற் பெற்றியொ டோங்கினன் வளனே.