முருகு வாய்ச்
சுளை முள் புறக் கனியொடு, பூங்கா
அருகு வாய்க் கனி பலவும் ஊழ்த்து அளித்த தீம் தேனும்,
உருகு வாய் இறால் உடைந்து உமிழ் தேனும் ஆர்ந்து ஒழுகிப்
பெருகு வாய்ப் புனல் பெற்றியோடு ஓங்கினன் வளனே. |
மணம்
கொண்ட சுளையை உள்ளும், முள்ளைப் புறத்தும்
கொண்டுள்ள பலாப் பழத்தோடு, பூஞ்சோலையின் அருகே நின்ற மரங்கள்
கொண்டுள்ள கனிகள் பலவும் முதிர்ந்து சொரிந்த இனிய தேனும், மணம்
நிறைந்த தேனடை உடைந்து சொரிந்த தேனும் சேர்ந்து நிறைந்து
பாய்வதனால் பெருகி ஓடும் ஆற்றைப் போல, இவற்றையெல்லாம் கண்ட
சூசை மகிழ்ச்சியில் மிகுந்தான்.
இப்பாட்டின்
கருத்தை I:33ஆம் பாட்டின் கருத்தோடு ஒப்பிடுக.
16 |
வினைகெ டப்பெரும்
வெறுக்கையர் பொழிநிதிக் குப்பை
தனைகெ டத்திருத் தாண்மிசை நவமணி கூப்பி
னனைகெ டக்கவி னந்தன சால்பதோ வென்றான்
சுனைகெ டக்கலுழ்ந் தூற்றதாய்த் துளித்தகட் சூசை. |
|
"வினை கெட,
பெரும் வெறுக்கையர், பொழி நிதிக் குப்பை
தனை கெட, திருத் தாள் மிசை நவ மணி கூப்பின்,
நனை கெடக் கவின் நந்தன, சால்பு அதோ?" என்றான்,
சுனை கெடக் கலுழ்ந்து, ஊற்று அது ஆய்த் துளித்த கண்
சூசை. |
அம்
மகிழ்ச்சியால், தடாகமும் ஒப்பாகாதவாறு அழுது, ஊற்றுப்
போல் நீர் துளித்த கண்களை உடைய சூசை, "பூவரும்பு கெடுமாறு அழகு
அமைந்த மகனே, பெருஞ் செல்வர் தம் பாவவினை நீங்குமாறு
இரவலர்க்குப் பொழியும் செல்வக் குவியலின் அளவும் குறைபடுமாறு, உனது
திருவடிகளில் நவமணிகளைக் கொண்டு குவித்தாலும், அது நிறைவாகுமோ?"
என்றான்.
நவமணி:
கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம்,
மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்.
|