திருமகன்
எத்தீவினையும் இல்லாதவன் ஆகவே, இங்குத் 'தீவினை'
என்றது, மனிதர் தீவினைகளைத் தானே தன்மீது சுமந்து கொண்டதைக்
குறிப்பதாகக் கொள்க.
19 |
ஆச வாவறு
மருந்தவ னறைந்தசொற் கேட்டு
வாச வாய்த்தென்றல் தீண்டிய முல்லைகள் மதுவை
வீச வாய்மலர்ந் தெனநகை காட்டிய விமலன்
பேச வாய்மலர்ந் தெதிர்த்தகாற் பெரும்பயன் விரித்தான். |
|
ஆசு அவா அறும்
அருந்தவன் அறைந்த சொல் கேட்டு,
வாச வாய்த் தென்றல் தீண்டிய முல்லைகள் மதுவை
வீச வாய் மலர்ந்து என நகை காட்டிய விமலன்,
பேச வாய் மலர்ந்து, எதிர்த்த கால் பெரும் பயன் விரித்தான்: |
குற்றங்களுக்குக்
காரணமான ஆசையை அகற்றிய அரிய
தவத்தோனாகிய சூசை சொன்ன சொற்களைக் கேட்டு, மணம் கொண்ட
தென்றல் தீண்டிய முல்லை அரும்புகள் தேனைப் பொழியுமாறு தம்
இதழ்களாகிய வாயை விரித்தது போல் புன்னகை செய்த தூயவனாகிய
திருமகன், பேசுமாறு தன் வாயைத் திறத்து, எதிர்காலத்தில்
விளையவிருக்கும் பெரும் பயன்களை விரித்துச் சொல்லத் தொடங்கினான்:
எதிர்காலப்
பயன் விரித்தமையால், இப்படலம் 'புரோகிதப் படலம்'
எனப்பெயர் பெறுவதாயிற்று. 'காலம்' என்பது, 'கால்' எனக் கடைக்குறை
ஆயிற்று.
20 |
தேனருந்தினர்
தீயவேம் பின்பமென் றருந்தார்
வானருந்திய வளத்தநான் வாழவோ மண்மே
லூன ருந்திய வுடலொடு தோன்றினேன் மிடிநோய்
நான ருந்திட நண்ணியுன் மனைதெரிந் துதித்தேன். |
|
"தேன் அருந்தினர்
தீய வேம்பு இன்பம் என்று அருந்தார்.
வான் அருந்திய வளத்த நான், வாழவோ, மண்மேல்
ஊன் அருந்திய உடலொடு தோன்றினேன்? மிடிநோய்
நான் அருந்திட நண்ணி, உன் மனை தெரிந்து உதித்தேன். |
|