வீடு
பெறும் பெருமை
25 |
ஓராழி
யுருட்டியநான் வீற்றிருக்குங்
கோயிலெனக்
குலகி லாகிப்
பாராழி யொன்றிணையாப் படர்செல்வ
நாட்டியல்யான்
பகர்வ தென்ன
நீராழி கடந்தங்கண் ணிம்மனைசென்
றடைக்கலமே
நிலத்திற் செய்தாங்
கோராழி யிரவியினிவ் வில்லிலங்கச்
செயுமித்தா
லியநா டன்றோ. |
|
"ஓர் ஆழி உருட்டிய
நான், வீற்றிருக்கும் கோயில் எனக்கு
உலகில்
ஆகி,
பார் ஆழி ஒன்று இணையாப் படர் செல்வ நாட்டு இயல்
யான்
பகர்வது என்ன?
நீர் ஆழி கடந்து அங்கண் இம் மனை சென்று, அடைக்கலமே
நிலத்தில்
செய்து, ஆங்கு
ஓர் ஆழி இரவியின் இவ் இல் இலங்கச் செயும் இத்தாலிய
நாடு
அன்றோ |
"ஒரே
ஆணைச் சக்கரத்தை நடத்தி உலகங்களையெல்லாம் ஆண்ட
நான், மண்ணுலகில் வீற்றிருக்கும் அரச மனையாக எனக்கு அமைந்து,
இவ்வுலகில் கடல் ஒன்றும் ஒப்பாகாத அளவு படர்ந்த செல்வம் கொண்ட
அந்நாட்டின் இயல்பை நான் எடுத்துச் சொல்ல வேண்டுவது என்ன? இவ்
வீடு நீர் நிறைந்த கடலைக் கடந்து அங்கே சென்று, அதற்குத் தானே
இவ்வுலகில் அடைக்கலம் தந்து, அங்கே ஒன்றைச் சக்கரம் கொண்ட
பகலவன் போல் இம்மனை இலங்கச் செய்யும் அந்த இத்தாலிய நாடு.
'கோயில்',
அரச மனை என்று இங்குக் குறித்தது திருச்சபையின்
ஆட்சிப் பீடத்தை என்க.
|