பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 63

இருபத்தாறாவது
 

  கருணையன் மாட்சிப் படலம்  


      இயேசுநாதரின் முன்னோடி எனப் போற்றப்படும் கருணையனின்
மாண்பு கூறும் பகுதி. மூல மொழியில் யோவான் எனவும், காரணக்
குறியால் நீராட்டி யோவான் (John the Baptist) எனவும், செந்தமிழில்
அருளப்பன் எனவும் வழங்கும் கருணையன் பிறப்போடு தொடர்புடைய
இதன் முற்பகுதி (1 - 49) 9-வது மகிழ்வினைப் படலத்திற்கும் 10-வது
மகவருள் படலத்திற்கும் இடையே வரத் தக்கது. திருக்குடும்பத்தினரின்
பரிவுள்ளத்தை ஒருங்கு விளக்கும் பயன் நோக்கி முனிவர் இதனை
இவ்விடத்து அமைந்துள்ளார் இப்படலத்து முற்பகுதிச் செய்திகள் லூக்கா
நற்செய்தி 1 : 5 - 24 36 - 66 காண்க.

                  கருணையன் பெற்றோர்

      - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

 
            1
அல்லறத் துளங்கு திங்க
     ளணிந்தமீன் பரப்புப் போலப்
பல்லறத் தொகுதி வாய்த்த
     பணிபுனை சக்க ரீய
னில்லறத் துணைவி குன்றத்
     திணையகற் பெலிச பெத்தை
சொல்லறத் துணையாய்த் தம்முட்
     டுணைபுறத் தின்றி நின்றார்.
 
அல் அறத் துளங்கு திங்கள் அணிந்த மீன் பரப்புப் போலப்
பல் அறத் தொகுதி வாய்த்த பணி புனை சக்கரீயன்;
இல்லறத் துணைவி குன்றத்து இணைய கற்பு எலிசபெத்தை
சொல் அறத் துணையாய், தம்முள் துணை புறத்து இன்றி நின்றார்.

      இரவின் இருள் கெடும்படி விளங்கும் சந்திரன் தன்னைச் சூழ
அணிந்துள்ள விண்மீன்களின் பரப்பைப் போல, பல வகை நல்லறங்களின்
தொகுதியைச் சிறந்த ஓர் அணிகலனாக அணிந்தவன் சக்கரீயன்.
அவனுடைய இல்லறத் துணைவி மலைக்கு நிகராக அசையாத கற்புள்ள