எலிசபெத்தை, இவர்கள்
தம்முள் நல்லறம் எனப்படும் இல்லறத்
துணைவராய், தமக்கு ஒப்பாவார் புறத்து எவருமின்றி வாழ்ந்தனர்.
சக்கரீயனுக்குத்
திங்களும், அவன் அறத் தொகுதிக்கு மீன் பரப்பும் உவமை. அல் - இரவு; ''அறமெனப்
பட்டதே இல்வாழ்க்கை,'' என்ற புகழுரைக்கு உரியதாதலின், 'சொல் அறம்' எனப்பட்டது.
'துணை' முதலில்
துணை எனவும், அடுத்து ஒப்பு எனவும் கொள்க.
2 |
கைவளர்
கொடையோ டொன்றக்
கான்வளர்
தவத்தின் மிக்கோர்
பொய்வள ருலகி னாசை
போற்றிய
புதல்வ ரின்றி
மெய்வளர் திருவு ளத்தின்
வினையிதென்
றுணர்விற் றேறி
மைவளர் துயரற் றோங்கி
வயதுமுற்
றியராய் நின்றார். |
|
கை வளர் கொடையோடு
ஒன்றக் கான் வளர் தவத்தின் மிக்கோர்;
பொய் வளர் உலகின் ஆசை போற்றிய புதல்வர் இன்றி,
மெய் வளர் திரு உளத்தின் வினை இது என்று உணர்வில் தேறி,
மை வளர் துயர் அற்று ஓங்கி, வயது முற்றியவராய் நின்றார். |
அவர்கள்
வீட்டிலிருந்து கையால் செய்யப்படும் தானத்தோடு
பொருந்தக் காட்டிலிருந்து செய்யப்படும் தவத்திலும் சிறந்து விளங்கினர்;
பொய்யின் அடிப்படையில் வளரும் உலகியல் ஆசையால் போற்றப்படும்
புதல்வரைப் பெற்றிலர்; வயது முதிர்ந்தவராய் மெய்யின் அடிப்படையில்
வளரும் கடவுள் திருவுளச் செயல் இதுவென்று உணர்ந்து தேறி,
அறியாமையின் அடிப்படையில் வளரும் துயரத்திற்கு இடந்தராது, மன
எழுச்சியோடு வாழ்ந்தனர்.
தம்
குடி விளங்கவும் முதுமையில் தமக்கு உதவவும் உலகத்தார்
மக்கட் செல்வத்தின் மீது ஆசை வைப்பர் அது தம் குடிக்கு இழிவாகவும்
முதுமையில் தமக்குத் துன்பமாகவும் முடிதல் உண்டு. எனவே, 'பொய்
வளர் ஆசை' எனப்பட்டது. கடவுள் எல்லாம் அறிந்தவராதலின், அவர்
செயல்
|