பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 65

'மெய் வளர் வினை' எனப்பட்டது. அதற்கு அமைந்து நடந்தலின், தேறியும்
துயரற்றும் ஓங்கியும் வாழ முடிந்தது. மை - மை போல் இருண்ட
அறியாமைக்கு ஆகு பெயர்.

 
              3
பூட்சியின் றுணையா மின்பப்
     புதல்வரை யின்றித் தூய்நல்
லாட்சியின் றுணையை தேடி
     யருமறை யுணர்ந்த வோதிக்
காட்சியின் றுணையோ டன்னார்
     கனிந்துயர்ந் தெவர்க்கு ஞானச்
சூட்சியின் றுணைதா மாகித்
     துகடவிர் புகழின் வாய்ந்தார்.
 
பூட்சியின் துணையாம் இன்பப் புதல்வரை இன்றி, தூய்நல்
ஆட்சியின் துணையை தேடி, அரு மறை உணர்ந்த ஓதிக்
காட்சியின் துணையோடு அன்னார் கனிந்து, உயர்ந்து, எவர்க்கும்
                                        ஞானச்
சூட்சியின் துணை தாம் ஆகி துகள் தவிர் புகழின் வாய்ந்தார்.

      அவர்கள் உடலுக்குத் துணையாய் நின்று இன்பம் தரும் புதல்வர்
தமக்கு இல்லாமையால், தூய்மையான நல்லறத்தைக் கடைப்பிடித்தலே
தமக்குத் துணையென்று தேடினர்; அரிய வேகத்தைக் கற்றுணர்ந்த அறிவுக்
காட்சியின் துணையோடு எல்லோரிடத்தும் கனிவோடு பழகினர்;
ஒழுக்கத்தால் உயர்ந்து நின்றனர் யாவர்க்கும் ஞான ஆலோசனைக்குத்
தாமே துணையாய் அமைந்தனர். இவ்வாறு குற்றம் நீங்கிய புகழுக்கு
உரியவராயினர்.

      ஆட்சி - ஆளுதல்; கடைப்பிடித்தல். ஓதி - ஓதுதலாற் பெறும்
அறிவு. சூட்சி - சூழ்ச்சி என்பதின் போலி.

 
           4
பரவலர் மலர்ந்த சோலை
படர்ந்ததண் ணிழலோ டொத்தார்
கரவலர் மலர்ந்து நல்குங்
கனிந்ததே னெவர்க்கு மூட்டிப்