பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 66

புரவல ராக நொந்து
     புலம்பினர்க் குயிரே யாகி
யிரவல ருயிராய்ப் பேணி
     யிவர்க்குமோ ருடம்பென் றானார்.
 
பரவு அலர் மலர்ந்த சோலை படர்ந்த தண் நிழலோடு ஒத்தார்;
கர அலர் மலர்ந்து நல்கும் கனிந்த தேன் எவர்க்கும் ஊட்டி,
புரவலர் ஆக, நொந்து புலம்பினர்க்கு உயிரே ஆகி,
இரவலர் உயிராய்ப் பேணி இவர்க்கும் ஓர் உடம்பு என்று ஆனார்.

      அவ்விருவரும் தங்கள் கையாகிய மலரை விரித்துத் தரும் கனிந்த
தேனாகிய கொடையைத் தம்மிடம் வந்த யாவருக்கும் ஊட்டினர். அதனால்,
மலர் பரவி மலர்ந்த சோலைக்கும் அதன் படர்ந்த குளிர் நிழலுக்கும்
ஒப்பாக விளங்கினர்; துன்பத்தால் நொந்து புலம்பியவர்க்குத் தாமே
புரவலராக நின்று உயிர் போல் ஆனார்; இரப்பவரைத் தம் உயிர்போலப்
பேணி, இவர்க்குத் தாம் ஓர் உடம்பு போல் ஆனார்.

     'இவர்க்கும்' என்றவிடத்து 'உம்' புலம்பியவர்க்கு உயிரே ஆனதை
உட்கொண்டு கூறியது 'கர அலர்' என்பது உருவகம். நொந்து
புலம்பினவரைத் தேற்றியமையால் உயிர் போலவும் இரவலர்க்கு வேண்டும்
பொருளைக் கொடுத்தலால் உயிர்க்கு வேண்டும் பொருளைத் தேடிக்
கொடுக்கும் உடல் போலவும் ஆனாரென்று கொள்க.

 
                 5
பேரறக் கன்னி வையிற்
     பிறக்குமுன் றனக்குத் தூதென்
றாரறத் தொகையோன் மைமைக்
     கரியதோர் புதல்வன் றோன்ற
வீரறப் படலைக் கண்ணி
     யேந்திவர்க் கிறைவ னந்நாள்
நேரறக் கருப்பந் தந்து
     நெடும்புக ழளித்த லோர்ந்தான்