பேரறக் கன்னி
வையின் பிறக்கும் முன், தனக்குத் தூதென்று
ஆர் அறத் தொகையோன் மைமைக்கு அரியதோர் புதல்வன்தோன்ற,
ஈரறப் படலைக் கண்ணி ஏந்து இவர்க்கு இறைவன் அந்நாள்
நேர் அறக் கருப்பம் தந்து நெடும் புகழ் அளித்தல்ஓர்ந்தான். |
இறைவன்
பெரிய புண்ணியங்களால் நிறைந்த ஒரு கன்னியிடத்து
அவதரித்துப் பிறக்கத் திருவுளங் கொண்டான். அவ்வாறு பிறக்கு முன்,
தனக்குத் தூதுவனாகப் புண்ணியமெல்லாம் தொகையாக நிறைந்த அரிய
புதல்வன் ஒருவன் மலடியிடத்து தோன்றவும் மனம் கொண்டான், அது
நிறைவேற, இல்லற துறவறம் இணைந்த ஈரறத்தை கண்ணிகளாகத் தொகுத்து
இணைத்த பெரிய மாலையாக ஏந்திய இவ்விருவர்க்கும் அந்நாளில் நிகரற்ற
தன்மையாய்க் கருப்பம் தந்து நீடித்த புகழை அளிக்க நினைத்தான்.
கன்னி
- கன்னி மரியாள், வையின் - 'இடம்' என்று பொருள்படும்
'வயின்' என்ற சொல் விகாரமாய் நின்றது. படலை மாலை - கண்ணிகளாகத்
தொடுத்து இணைத்த பெரிய மாலை.
6 |
கேள்வியின்
புலமை மூத்தோன்
கெழுமிய
முறையிற் றூம
வேள்வியின் முகத்து நிற்ப
வேய்ந்தவிண்
ணவற்கண் டஞ்சச்
சூழ்வினை யறிந்த வானோன்
சொல்லெடுத்
தஞ்சே லஞ்சேல்
வாழ்வினை யுரைப்பத் தூதாய்
வந்தனென்
கேட்டி யென்றான். |
|
கேள்வியின்
புலமை மூத்தோன் கெழுமிய முறையின் தூம
வேள்வியின் முகத்து நிற்ப, வேய்ந்த விண்ணவன் கண்டு அஞ்ச,
சூழ்வினை அறிந்த வானோன் சொல் எடுத்து, ''அஞ்சேல், அஞ்சேல்! வாழ்வினை உரைப்பத்
தூதாய் வந்தனென்; கேட்டி'' என்றான். |
|