பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 68

      வேத நூலைக் கேட்டறிந்த புலமையிலும் முதிர்ந்தவனாகிய
சக்கரீயன் அமைந்த முறைப்படி அன்று தூப வழிபாட்டில் ஈடுபட்டு
நின்றான்; கதிர் சூடித் தன்முன் தோன்றிய வானவனைக் கண்டு
அஞ்சினான். இறைவன் கருதிய வினையை அறிந்திருந்த வானவன் பேசத்
தொடங்கி, ''அஞ்சாதே, அஞ்சாதே! நான் நல்வாழ்வுச் செய்தி சொல்லத்
தூதனாய் வந்தேன்; சொல்வதைக் கேள்'' என்றான்.

 
            7
மாண்டகை யறத்தின் பாலான்
     மைந்தனே நினக்குத் தோன்றக்
காண்டகை யுரிய பண்பாற்
     கருணைய னவனை யென்பா
யாண்டகை முகத்து முன்னி
     யவற்கதர் செப்பஞ் செய்து
சேண்டகை யடையத் தீயோர்
     செலுத்துவா னெறியி லென்றான்.
''மாண் தகை அறத்தின் பாலான் மைந்தனே நினக்குத் தோன்ற,
காண் தகை உரிய பண்பால் கருணையன் அவனை என்பாய்;
ஆண்டகை முகத்து முன்னி, அவற்கு அதர் செப்பஞ் செய்து,
சேண்தகை அடையத் தீயோர் செலுத்துவான் நெறியில்'' என்றான்.

      அவ்வானவன் தொடர்ந்து, ''மாண்பிற்குரிய அறத்தைத் தன்பாற்
கொண்டுள்ள ஒருவன் மகனாய்த் தோன்றுவான். அவன்பாற் காண்பதற்குரிய
குணத்தின் அடிப்படையில், ஆண்டவன் என்று அவனைப் பேரிட்டு
அழைப்பாய். அவன் ஆண்டவன் முகத்து முன்னுறச் சென்று, அவனுக்கு
வழியைச் செப்பஞ் செய்வான். வானுலகம் செல்லும் தகுதி அடையுமாறு
தீயோரை நன்னெறியிற் செலுத்துவான்'' என்றான்.

 
           8
முதிர்ந்தன காலஞ் சாய்ந்த
     முகத்திலோ வுவப்ப நானே
யெதிர்ந்தன பிள்ளை காண்பே
     னென்றனன் மூத்தோ னென்றுட்