பொதிர்ந்தன
வயிர்ப்புற் றாயே
புகன்றவை
கண்டா லல்லா
லதிர்ந்தன துயரி லூமை
யாதியென்
றொளித்தான் வானோன். |
|
''முதிர்ந்து,
அன காலம் சாய்ந்த முகத்திலோ உவப்ப நானே
எதிர்ந்து அன பிள்ளை காண்பேன்?'' என்றனன் மூத்தோன்.
''என்று
உள்
பொதிர்ந்தன அயிர்ப்பு உற்றாயே; புகன்றவை கண்டால் அல்லால்,
அதிர்ந்து அன துயரில் ஊமை ஆதி!'' என்று ஒளித்தான் வானோன். |
அது
கேட்ட முதிய சக்கரீயன், ''வயதும் முதிர்ந்து, மகப்
பேற்றுக்குரிய அந்தக் காலமும் கடந்த நிலையிலோ நான் மகிழுமாறு
அத்தகைய பிள்ளையை எதிர்கொண்டு காண்பேன்?'' என்றான், வானவன்
அவனை நோக்கி, ''என்று இவ்வாறு உள்ளே பொதிந்து கிடந்த பொருள்கள்
மீது ஐயம் கொண்டாயே; அதன் பயனாக, நான் கூறியவை நிறைவேறக் கண்டால் தவிர (நீங்குதற்கு
இடமில்லாது) அதிர்ச்சியுற்று, அந்தத்
துயரத்தோடு ஊமை ஆகக்கடவாய்!'' என்று கூறி மறைந்தான்.
பொதிர்ந்தன
- 'பொதிந்தன' என்ற சொல் எதுகைக்காக,
'பொதிர்ந்தன' என்று நின்றது.
9 |
இவ்வழி
யெவரு மஞ்ச
விருந்தவன்
கையாற் பேசிச்
செவ்வழி யுளத்துத் தேவ
திருவுளம்
போற்றி யையம்
வவ்வழி வொழியத் தூது
வந்தகா
பிரியேல் சொன்ன
தவ்வழி கருப்ப மாகி
யதிசயித்
தோங்கி னானே. |
|
இவ் வழி எவரும்
அஞ்ச இருந் தவன் கையால் பேசி,
செவ் வழி உளத்துத் தேவ திருவுளம் போற்றி, ஐயம்
வவ்வு அழிவு ஒழியத் தூது வந்த காபிரியேல் சொன்னது
அவ் வழி கருப்பம் ஆகி, அதிசயித்து ஓங்கினானே. |
|