"ஓங்கியது ஓர்
உடல் முகமோ, முகக் கண்ணோ, கண்
மணியோ,
ஒளி செய் மார்பில்
தூங்கியது ஓர் பூண் கலனோ, சுடர் முடியோ, முடி மணியோ
சொல்லும்
தன்மை
நீங்கியது ஓர் வனப்பு இவ் இல், நிலத்து எல்லை நிகர் இல்லா,
நேமி
தன்னில்
வீங்கியது ஓர் பேரின்ப வீடு அதுவே; மேல் வீட்டு வாயில்
அஃதே. |
நிமிர்ந்து
நின்ற ஓர் உடலுக்கு முகமோ, அம்முகத்தில் அமைந்த
கண்ணோ, அக்கண்ணின் கரு விழியோ, ஒளி பொருந்திய மார்பில்
தொங்கிய ஓர் அணிகலனோ, ஒளி பொருந்திய முடியோ, அம்முடியில்
அமைந்த மாணிக்கமோ என்றெல்லாம் சொல்லும் தன்மை கடந்த ஓர்
ஆழகோடு அமைந்த இவ்வீடு, இவ்வுலகின் எல்லைக்குள் தனக்கு இணை
இல்லாமல், இம்மண்ணுலகில் பெருமை கொண்டு அமைந்த ஒரு பேரின்ப
வீடாகிய மோட்சமும் அதுவே ஆகும்; மேலுலக வீட்டிற்கு வாயிலும்
அதுவே ஆகும்.
28 |
அடிகோடி தாங்கியெழுந்
தந்தரமேன்
மணிச்செகரத்
தகன்ற நெற்றிக்
கொடிகோடி யாடிடவுட் குழல்கோடி
குரல்கோடி
குயின்று பாட
முடிகோடி கீழ்பணிய முன்விளக்கோர்
கோடிபகல்
முற்றி மின்னத்
துடிகோடி சூழ்முழங்கத் துணையறுமாங்
கிம்மனையின்
றோற்ற மன்றோ. |
|
"அடி கோடி தாங்கி
எழுந்து, அந்தர மேல் மணிச் செகரத்து
அகன்ற
நெற்றிக்
கொடி கோடி ஆடிட, உள் குழல் கோடி குரல் கோடி குயின்று
பாட,
முடி கோடி கீழ் பணிய, முன் விளக்கு ஓர் கோடி பகல் முற்றி
மின்ன,
துடி கோடி சூழ் முழங்க, துணை அறும் ஆங்கு, இம்மனையின்
தோற்றம்
அன்றோ. |
"தனக்கு
அடியில் கோடித் தூண்கள் தாங்கி நிற்க எழுந்து நின்று,
வானத்தின் மேல் எட்டிய தன் மணி முடியோடு அகலமாய் அமைந்த
|