பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 633

                 சூசையின் வியப்பும் ஐயமும்

 
                   30
எனையீன்ற விணையாவித் தாலியநா
     டளவின்றி யியலு மாட்சி
சுனையீன்ற மலர்வாயான் றுளிமதுப்போ
     லின்பமுகுஞ் சொல்லாற் சொன்ன
வினையீன்ற வியப்புடனுண் மிகவேய்ந்த
     வையமற வினவித் தண்டே
னனையீன்ற நறுங்கொடியோ னளினமடுந்
     தாடொழுதே நவின்றான் மாதோ.
 

எனை ஈன்ற இணையா இத்தாலிய நாடு அளவு இன்றி இயலும்
                              மாட்சி,
சுனை ஈன்ற மலர் வாயான், துளி மதுப் போல் இன்பம் உகும்
                              சொல்லால் சொன்ன
வினை ஈன்ற வியப்புடன், உள் மிக ஏய்ந்த ஐயம் அற, வினவி,
                              தண் தேன்
நனை ஈன்ற நறுங் கொடியோன், நளினம் அடும் தாள் தொழுதே
                              நவின்றான் மாதோ:


     தடாகம் ஈன்று தந்த தாமரை மலர் போன்ற வாயையுடைய திருமகன்,
துளியாக விழும் தேனைப் போல் இன்பம் சொரியும் சொல்லால், என்னைப்
பெற்றளித்த ஒப்பற்ற இத்தாலிய நாடு அளவில்லாமல் அடையவிருக்கும்
மாட்சியைக் குறித்துச் சொன்ன செயல் தனக்குத் தந்த வியப்போடு, தன்
உள்ளத்தில் மிகவே பொருந்திய ஐயம் நீங்குமாறு, குளிர்ந்த தேனைக்
கொண்டுள்ள அரும்புகள் தந்த நறுமணப் பூங்கொடியை உடையவனாகிய
சூசை வினவி, தாமரை மலரை வாட்டும் அத்திருமகன் அடியைத் தொழுது,
பின்வருமாறு கூறினான்:

     "பாடினவன் இத்தாலிய நாட்டிற் பிறந்தானாகையால், 'எனை ஈன்ற
இத்தாலிய நாடு' என்றான் என்க" என்பது பழையவுரை அடிக் குறிப்பு.

 
                      31
ஏமுற்றுக் காத்தனகா லெவன்னில்லா
     மற்றடிக ளிடைநீ காய்ந்தாற்
பூமுற்றும் பெயர்ப்பதரும் பொருளுனக்கோ
     வாயினுநீ புகழ்ந்த நாடர்