காமுற்றுச்
சீலமறக் காசினிமுற்
றழிந்திறைஞ்சுங்
கடவு ளெல்லாந்
தாமுற்றுப் போற்றுவராம் பின்புரைத்த
தகுதியுறுந்
தடமே தென்றான். |
|
"ஏம் உற்றுக்
காத்தன கால், எவன் நில்லா, மற்று அடிகள்?
இடை நீ காய்ந்தால்,
பூ முற்றும் பெயர்ப்பது அரும் பொருள் உனக்கோ? ஆயினும்,
நீ புகழ்ந்த நாடர்,
காம் உற்று, சீலம் அற, காசினி முற்று இழிந்து இறைஞ்சும்
கடவுள் எல்லாம்
தாம் உற்றுப் போற்றுவராம்; பின்பு, உரைத்த தகுதி உறும்
தடம் ஏது?" என்றான்
|
"கடவுளாகிய
நீ பாதுகாப்பாக நின்று காத்த விடத்து, நிலை பெறாதது
எது? இடையே நீ சினங் கொண்டால், உலகம் முழுவதையும்
பெயர்த்தெறிவதும் உனக்கு அரிய காரியமோ? ஆயினும், நீ புகழ்ந்த
இத்தாலிய நாட்டார், காமத்திற்கு இடம் தந்தும், ஒழுக்கம் கெட்டும்,
இவ்வுலகம் முழுவதும் தனக்குக் கேடாம்படி வணங்கும்
கடவுள்களையெல்லாம் தாம் கொண்டு போற்றுவரென்று அறிகிறேன்;
அப்படியானால், நீ சொன்ன தகுதியை அந்நாடு பெறுவதற்கு வழி ஏது?;"
என்றான்.
'ஏமம்'
'காமம்' என்பன, விகுதிகெட்டு, 'ஏம்' 'காம்' என நின்றன.
'அடிகள்' என்பது கடவுளைச் சுட்டு மிடத்து ஒருமை குறிக்கும். 'மற்று'
அசைநிலை, 'அரும் பொருள் உனக்கோ' என்ற விடத்து, ஓகாரத்தைப்
பிரித்து 'அரும் பொருளோ உனக்கு' எனக் கூட்டுக.
போதனையும்
வேதனையும்:
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
32 |
செவ்வழி
யுளத்துச் சான்றோன்
செப்பிய
வுரைகள் கேட்ப
வெவ்வழி யனைத்துந் தாவி
யெல்லையைக்
கடந்த காட்சி
யவ்வழி யணுகி யாவு
மணுகுமுன்
முன்னு நூலோன்
மெய்வ்வழி விதிப்ப மென்பூ
விள்ளென
விளம்ப லுற்றான், |
|