பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 636

          34
மழைக்குலம் பொழியு மாரி
     வழங்கிலா நாளி லுண்ணீ
ருழைக்குலங் கண்டு வீழு
     மொத்தெலாத் துகண்மேல் வீழப்
பிழைக்குல மாக மாக்கட்
     பேருயிர் வினைகொண் டெஞ்சித்
தழைக்குலம் வளிநாள் வீழுந்
     தன்மையே நரகில் வீழ்வார்.
 
"மழைக்குலம் பொழியும் மாரி வழங்கு இலா நாளில், உண் நீர்
உழைக்குலம் கண்டு வீழும் ஒத்து, எலாத் துகள் மேல் வீழ,
பிழைக்குலம் ஆக, மாக்கள் பேர் உயிர் வினை கொண்டு எஞ்சி,
தழைக் குலம் வளி நாள் வீழும் தன்மையே, நரகில் வீழ் வார்.

     "மேகக் கூட்டங்கள் பொழியும் மழை தராத நாளில், மான் கூட்டம்
தண்ணீரைக் கண்டு விரும்பிஓடுதல் போல், எல்லா வகைப் பாவங்களும்
தம்மீது விழுமாறு, குற்றத்துக்கு ஆளாகிய குலமாக, மனிதர் தம் பெருமை
வாய்ந்த உயிர் தீவினைகளால் கெட்டு, காற்று நாளில் இலைக் கூட்டம்
உதிர்ந்து விழும் தன்மை போல், நரகத்தில் விழுவர்.

     பேருயிர்: பெருமை + உயிர். மனித உயிர், அழியாத ஆன்மாவைக்
கொண்டுள்ளமையின், 'பேருயிர்' எனப்பட்டது.

 

                      35
தீயவை விழைந்த மாக்க டீயெரி வீழ்வ ரென்னாத்
தூயவை யிரங்கிக் காட்டத் துன்னிநான் றுன்ப மின்ப
மாயவை விழைந்து வேதத் தருநெறி யோதிச் சீற்றங்
காயவை யியற்றும் யாவுங் காதலித் திரியா நிற்பேன்.
 
"தீயவை விழைந்த மாக்கள் தீ எரி வீழ்வர் என்னா,
தூயவை, இரங்கி, காட்டத் துன்னி நான், துன்பம் இன்ப
மாய், அவை விழைந்து, வேதத்து அரு நெறி ஓதி, சீற்றம்
காய் அவை இயற்றும் யாவும் காதலித்து, இரியா நிற்பேன்

.     "தீய பாவங்களை விரும்பிச் செய்த மக்கள் நெருப்பு நிறைந்த
நரகத்தில் விழுவரேயென்று இரங்கி, தூய புண்ணியங்களை அவர்களுக்கு
எடுத்துக் காட்ட அணுகிச் சென்று, துன்பத்தை இன்பமாகக் கொண்டு,
அவற்றையே விரும்பி ஏற்று, அரிய வேத நெறியை எடுத்துக் கூறி,