பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 637

சினத்தால் காய்ந்து அம்மக்கள் செய்யும் அவற்றையெல்லாம் விரும்பியேற்று,
அவர்களை விட்டு விலகாமல் நடந்து வந்தேன்.

 
                           36
தாய்வினை யியற்றி யாருந் தமரினூங் கினிய ராகத்
தீய்வினை நோயுஞ் சாவுந் தீர்த்துநா னொழுகும் வேலை
தூய்வினை செய்த பாலாற் சுடுவினை தீயோர் செய்ய
நோய்வினை மகிழ்ந்து நானே நுகற்கிற்பே னளவிற் றன்றே.
 

"தாய் வினை இயற்றி, யாரும் தமரின் ஊங்கு இனியர் ஆக,
தீய் வினை நோயும் சாவும் தீர்த்து நான் ஒழுகும் வேலை,
தூய் வினை செய்த பாலால் சுடு வினை தீயோர் செய்ய,
நோய் வினை மகிழ்ந்து நானே நுகர்கிற்பேன் அளவு இற்று
                                         அன்றே.


     "தாய்க்குரிய செயலே புரிந்து, அனைவரையும் உறவினருக்கு மேலும்
இனியவராகக் கொண்டு, அவர் தம் தீய பாவ வினையையும் நோயையும்
சாவையும் தீர்த்து நான் வாழ்ந்து வரும் காலத்தில், தூய செயல்களே நான்
செய்த தன்மையால் தீயோர் கொடுஞ் செயல்கள் செய்யவும், அத்துன்பச்
செயல்களை அளவில்லாது நானே மகிழ்ந்து அனுபவிப்பேன்.

     'அன்றே' அசை நிலை. 'நுகர்கிற்பேன்' என்ற சொல்லின் இடையே,
'கில்' ஆற்றல் உணர்த்தும் இடைநிலை.

 
                      37
பொருந்தலர்த் தடிந்து வீழ்த்துப் புட்குலத் தினிதெஞ்
                                         ஞான்றும்
விருந்தம ரமர்செய் கிற்பார் வெற்றியே யிங்கண் கொள்வார்
வருந்தல ரியாரு முய்ய வருந்திநா னொருவன் றெய்வ
மருந்தம ரிரத்தஞ் சிந்தி மாண்டலிற் கொற்றங் கொள்வேன்,
 
"பொருந்தலர்த் தடிந்து வீழ்த்து, புள் குலத்து இனிது எஞ்ஞான்றும்
விருந்து அமர் அமர் செய்கிற்பார் வெற்றியே, இங்கண் கொள்வார்;
வருந்து அலர் யாரும் உய்ய வருந்தி, நான் ஒருவன், தெய்வ
மருந்து அமர் இரத்தம் சிந்தி மாண்டலில் கொற்றம் கொள்வேன்."