வானல நான்றரத்
தந்தன நூன்மறை
வையத்
தெங்கும் வகுத்தோதச்
சூனலங் கொண்முகி லொத்தவ ரேகியென்
சுருதி
பரவுற் றுலகாள்வேன். |
| |
"நூல் நலம் வான்
பொருள் செய் நலம் இன்றியும், நுனி வேல்
சூழ்ந்து
நிலம் ஆளும்
கோல் நலம் இன்றியும், ஈங்கு எனக்கு ஒத்தன குறும் பாட்டு
இல்லோர்
தமைத் தேர்ந்து,
வான் நலம் நான் தர, தந்தன நூல் மறை வையத்து எங்கும்
வகுத்து
ஓத,
சூல் நலம் கொள் முகில் ஒத்து அவர் ஏகி, என் சுருதி பரவு
உற்று,
உலகு ஆள்வேன், |
"நூல்களைக்
கற்ற அறிவு நலமும் சிறந்த செல்வத்தால் வரும் நலமும்
இன்றி, உரிய நுனியுள்ள வேலைத் தாங்கிய படை வீரர் சூழக் கொண்டு
மண்ணுலகை ஆளும் ஆட்சிக் கோலின் செம்மையும் இன்றி, இங்கு எனக்கு
ஒத்த குறை கொண்ட வறியோரைத் தேர்ந்தெடுத்து, வானுலக நன்மைகளை
இவ்வுலக மக்களுக்குத் தரும் பொருட்டு, நான் தந்த வேத நூலை
வகைப்படுத்திக் கற்பிக்குமாறு, நீராகிய கருவைக் கொண்ட மேகம் போல்
அவர்கள் சென்று, அதன் மூலம் என் வேதம் பரவி, இவ்வாறு நான்
உலகத்தை ஆள்வேன்.
| 41 |
இத்திறத்
தோர்தமை வேந்தரும் போற்றுப
வெல்லை
யில்லாக் கலைவல்லோர்
பொய்த்திறத் தாய்ந்ததந் நூன்மறுத் தேத்துப
புவனம்
யாவும் வியந்தஞ்ச
மெய்த்திறத் தற்புத நாவொடு நூலெலாம்
விண்ணின்
றெய்தி வரத்தோங்கு
மத்திறத் தெத்திறத் தற்புத மாட்சியு
மன்னார்
காட்டி நிலமீட்பார். |
| |
"இத் திறத்தோர்
தமை வேந்தரும் போற்றுப, எல்லை இல்லாக்
கலை
வல்லோர்,
பொய்த் திறத்து ஆய்ந்த தம் நூல் மறுத்து, ஏத்துப. புவனம்
யாவும்
வியந்து அஞ்ச,
மெய்த் திறத்து அற்புத நாவொடு, நூல் எலாம் விண் நின்று
எய்தி,
வரத்து ஓங்கும்
அத் திறத்து, எத் திறத்து அற்புத மாட்சியும், அன்னார், காட்டி,
நிலம்
மீட்பார் |
|