|
"இத்
தன்மை கொண்ட அப்போதகரை அரசரும் போற்றுவர். எல்லை
இல்லாத கலைகளில் வல்லோர், ஆராய்ந்த தமது பொய்த் தன்மை கொண்ட
நூல்களைத் தாமே மறத்து, அவர்களைப் புகழ்வர். அவர்கள், உலகம்
முழுவதும் வியந்து அஞ்சத்தக்க வகையில், மெய்யுரைக்கும் ஆற்றல்
கொண்ட அரிய நாவன்மையோடு, நூல்களின் அறிவெல்லாம் விண்ணினின்று
அடையப் பெற்று, வரங்களில் சிறந்தோங்கும் அத்தன்மையால்,
எவ்வகையான புதுமைகளையும் சிறப்புறச் செய்து காட்டி, அதன்மூலம்
அத்தகையோர் இம்மண்ணுலகைப் பொய்யினின்று மீட்பர்.
| 42 |
பாடிய வோதையும்
வீணைசெய் யோதையும்
பகையற்
றொப்ப வெவர்கேளா
ராடிய நூன்மறை யொத்தற நன்னெறி
யன்னார்
நீங்கா வொழுக்கத்தாற்
கோடிய வுள்ளமு மின்புறீஇச் சொன்னதுட்
கொண்டு
குன்றாத் தெளிவெய்தி
நேடிய நன்றுற வுற்றவை நீங்கில
நிலையே
பெறவேழ் வரமீவேன். |
| |
"பாடிய ஓதையும்
வீணைசெய் ஓதையும், பகை அற்று ஒப்ப,
எவர்
கேளார்?
ஆடிய நூல் மறை ஒத்து அற நல் நெறி அன்னார் நீங்கா
ஒமுக்கத்தால்,
கோடிய உள்ளமும் இன்பு உறீஇ சொன்னது உள் கொண்டு,
குன்றாத்
தெளிவு எய்தி,
நேடிய நன்று உற, உற்றவை நீங்கு இல நிலையே பெற,
ஏழ்வரம்
ஈவேன். |
"வாயாற்
பாடிய பாடலின் ஓசையும் வீணை எழுப்பும் ஓசையும்,
பகையின்றி இசை நூலுக்கு ஏற்ப அமையுமாயின், விரும்பிக் கேளாதவர்
யார்? தாம் உரையாடிய வேத நூலுக்கு ஒத்த வண்ணம் நல்ல அறநெறி
பிறழாது அப்போதகர் கடைப்பிடிக்கும் ஒழுக்க மேம்பாட்டால், கோணலான
உள்ளமும் இன்புற்று, அவர்கள் சொன்னதை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு,
குறையற்ற தெளிவு பெற்று, நாடிய நல்வாழ்வைப் பெறவும், பெற்ற
அந்நன்மைகளில் நிலைபெறவும், ஏழு வரங்களை நான் வகுத்துத் தருவேன்.
|