| 44 |
தாய்விளை
யன்பிணை யாதெனப் பின்புறத்
தயையின்
மிக்கோர் முறையுள்ளி
மீய்விளை யின்பொடி யாவரும் வாழ்ந்துண
விரும்பி
நானே விருந்தாவேன்
நோய்விளை நஞ்சுறழ் தீயவை யின்பென
நுகர்ந்து
மீண்டே புரைகொண்டாற்
றீய்விளை யப்பிணி தீர்க்கும ருந்தெனச்
சிறந்தோர்
தேவ முறைசெய்வேன். |
| |
"தாய் விளை
அன்பு இணையாது எனப் பின்பு உற, தாயையின்
மிக்க
ஓர் முறை உள்ளி,
மீய் விளை இன்பொடு யாவரும் வாழ்ந்து உண விரும்பி, நானே
விருந்து
ஆவேன்.
நோய் விளைநஞ்சு உறழ் தீயவை இன்பு என நுகர்ந்து, மீண்டே
புரை
கொண்டால்,
தீய் விளை அப் பிணி தீர்க்கும் மருந்து என, சிறந்த ஓர்
தேவ
முறை செய்வேன். |
"தாயிடம்
பிறக்கும் அன்பும் ஒப்பாகாதென்று பின்னடையுமாறு,
இரக்கத்தில் மிக்க ஒரு முறையைக் கருதி, மேலுலகில் விளையும்
இன்பத்தோடு யாவரும் உண்டு வாழ வேண்டுமென்று விரும்பி, நானே
ஆன்மாவிற்கு நற்கருணை என்னும் திருவிருந்தாக அமைவேன். துன்பம்
விளைவிக்கும் நஞ்சு போன்ற தீமைகளை இன்பமென்று உட்கொண்டு,
ஆன்மா மீண்டும் பாவத்திற்கு ஆளானால், நரகை விளைவிக்கும்
அந்நோயைத் தீர்க்கும் மருந்தாக, பாவ மன்னிப்பு என்னும் சிறந்த ஒரு
தெய்வ முறையை அமைப்பேன்.
'வாழ்ந்து
உண' என்பதனை, 'உண்டு வாழ' என மாற்றிப் பொருள்
கொள்க. 'மிக்கவோர்' 'சிறந்தவோர்' என்பன, தொகுத்தல் விகாரமாய்,
'மிக்கோர்' 'சிறந்தோர்' என நின்றன. மீ, தீ என்பன எதுகை நோக்கி, மீய்,
தீய் என விரித்தல் விகாரம் பெற்றன.
|