| 45 |
துஞ்சிய காற்பழிப்
பேயமர் வென்றெழத்
தூய்நெய்
பூசற் றிறன்றந்து
விஞ்சிய மாயிரு ணீக்குவி ளக்கென
விதிசெய்
யத்தர் விளைவீந்தே
யஞ்சிய கோதில வாழவு மன்றலை
யருள்செய்
யாக்கை யெனச்செய்வே
னெஞ்சிய மாக்களு மித்திறத் தேழ்வர
மெய்திக்
குன்றத் திணை நிற்பார். |
| |
"துஞ்சிய கால்,
பழிப் பேய் அமர் வென்று எழ, தூய் நெய்
பூசல்
திறன் தந்து,
விஞ்சியமா இருள் நீக்கு விளக்கு என, விதி செய் அத்தர்
விளைவு
ஈந்தே,
அஞ்சிய கோது இல வாழவும் மன்றலை அருள்செய் யாக்கை
எனச்
செய்வேன்.
எஞ்சிய மாக்களும் இத் திறத்து ஏழ் வரம் எய்தி, குன்றத்து
இணை
நிற்பார். |
"இறக்கும்
வேலையில், பழம்பழி கொண்ட பேய் செய்யும் போரை
வென்று ஏழுமாறு, இறுதிப் பூசுதல் என்னும் தூய எண்ணெய் பூசும்
தன்மையும் தந்து, மிஞ்சிய பேரிருளை நீக்கும் விளக்குப் போல,
விதிமுறைப்படி அமைந்த குருக்களைத் தோற்றுவிக்கும் குருத்துவம்
என்ற அருட்சாதனமும் தந்து, அஞ்சத்தக்க காமக் குற்றம் இல்லாமல்
மக்கள் நெறியாய் வாழவும் திருமணத்தைத் தெய்வ அருள் தரும்
ஆதாரமாகச் செய்வேன். பாவக் கேட்டால் மெலிந்த மக்களும் இவ்வாறு
ஏழு வரங்களின் துணையை அடைந்து, அறவாழ்வில் மலை போல்
நிமிர்ந்து நிற்பர்.
'துஞ்சிய
கால்' என, எதுகை நோக்கி, இறந்த கால வாய்பாட்டாற்
கூறியிருப்பினும், பொருள் நோக்கி, 'துஞ்சுங்கால்' என' எதிர்காலமாகக்
கொள்க.
| 46 |
காருரு வென்னுடல்
மாமலைக் கோட்டுயர்
கருணைச்
செந்நீர் மழைபெய்யப்
பேரொரு வெள்ளமு மோடலி லிவ்வரம்
பிரிந்த
வேழா றெனவோடித் |
|