கான் உகும் பூங்
கொடியோனும், அத்தாள் மிசைக் கமழ் பூ
ஏற்றித்
தொழ,
தானும் ஊன் உகும் ஆக்கையை ஏந்திய நாதனை உணர்ந்து,
பாடத்
தொடங்கின்றான்: |
வானுலகம்
பொழியும் அழகோடு அங்கு வந்து தோன்றிய வானவர்,
இவையெல்லாம் தம் மனத்தில் நினைந்து மகிழ்ந்து, தேனைச் சொரிவது
போன்ற இனிய குரல் கொண்ட யாழினின்று இசை எழுப்பி, திரு மைந்தனின்
திருப்பெயர்ப் புகழைப் பாடிக் கொண்டிருக்க, மணம் சொரியும்
மலர்க்கொடியைத் தாங்கிய சூசையும், அத்திருமகன் அடியில் மணமுள்ள
மலர்களை இடடுத் தொழுது, ஊனால் ஆகிய உடலை எடுத்து வந்த
ஆண்டவனைத் தானும் உள்ளபடி உணர்ந்து, பின்வருமாறு பாடத்
தொடங்குகின்றான்:
சூசையின்
துதிப்பாடல்
[வெள்ளோசை கொண்ட இசைப்பாடல்]
| 48 |
ஒன்றில்லா
தெல்லா முளவாக்கி னோனல்லா
னன்றில்லா வையத்திந் நன்றிசெய் வான்யாரே
நன்றிசெய் வாரில்லா நாம் வாழத் தானிறந்து
வென்றிசெய் வானெமக்கு நீயல்லால் வேறியாரே. |
| |
"ஒன்று இல்லாது,
எல்லாம் உள ஆக்கினோன் அல்லால்,
நன்று இல்லா வையத்து, இந் நன்றி செய்வான் யாரே?
நன்றி செய்வார் இல்லா, நாம் வாழத் தான் இறந்து
வென்றி செய்வான் எமக்கு நீ அல்லால் வேறு யாரே? |
"முன்
ஒன்றுமே இல்லாதிருந்து, பின் எல்லாம் தானே உண்டாக்கின
ஒருவனே அல்லாமல், நன்மையே இல்லாத இவ்வுலகத்தில், இத்தகைய
நன்மை செய்யக்கூடியவன் யார்? அதற்கான நன்றி செலுத்துவோர்
இல்லாதிருந்தும், நாங்கள் வாழும்படியாகத் தானே இறந்து, அதன் மூலம்
வெற்றி கொள்பவன் எங்களுக்கு நீயேயல்லாமல் வேறு யார்?
யாம்
என்பதற்கு நாம் என்றது இடவழுவமைதி,
|