"கைம்மாறு இவண்
வெஃகா, காம் உற்று, இவை எல்லாம்
மெய்ம் மாறு எமக்கு அளிப்ப, விஞ்சு அருட் சென்றோன் யாரே?
விஞ்சு அருட் சென்று, ஆசு அற நாம் மீ வாழ, தான் நொந்து,
நெஞ்சு அருட் சென்று, ஈங்கு இறக்கும் நீ அல்லால், யார் யாரே?" |
"தனக்குப்
பதில் உதவி எதுவும் இங்கு விரும்பாமல், அன்பையே
அடிப்படையாகக்கொண்டு, உண்மையினின்று மாறுபடும் இயல்புள்ள எமக்கு
இவையெல்லாம் வழங்குமாறு, மிஞ்சிய கருணையின் வழியில் நின்றவன்
யார்? மிஞ்சிய கருணையின் வழியில் நின்று, பாவங்கள் நீங்கப் பெற்று
நாங்கள் மேலுலகில் வாழ்வு பெறும்படி, தன் நெஞ்சில் அருள் கொண்டு,
தானே துன்பப் பாடுகளால் நொந்து, இம்மண்ணுலகில் இறக்கவிருக்கும் நீயே
அல்லாமல் வேறு யார் யார்?" யாம் என்பது நாம் என வந்தது
இடவழுவமைதி.
சூசை
கண்ட வானகக் காட்சி
-
விளம், - விளம், - மா, கூவிளம்
| 51 |
இனையவும்
பலவுமாங் கியல நாடொறும்
வனையவும் புவிநிகர் மடிய வானுல
கனையவு மம்மனை யரிய தேவநூல்
புனையவு மாமுனி பொருவற் றோங்குவான். |
| |
|
இனையவும் பலவும்
ஆங்கு இயல நாள் தொறும்,
வனையவும் புவி நிகர் மடிய, வான் உலகு
அனையவும், அம் மனை, அரிய தேவநூல்
புனையவும், மா முனி பொருவு அற்று ஓங்குவான்.
|
இவையும்
இவை போன்ற பலவும் அங்கு நாள் தோறும் நடைபெற,
அச்சிறு மனை, புனைந்து கூறவும் இவ்வுலகில் நிகர் கெடவும், வானுலகமே
போன்று விளங்கவும், அரிய தெய்வ நூலே அணிகலனாக அமையவும்,
சூசை மாமுனி நிகரற்று உயர்ந்து விளங்குவான்.
|