| 54 |
பொன்னெடுங்
குடைகளும் பொன்னம் பூண்களும்
வன்னெடு மிரதமு மணிக்கொ டிஞ்சியுந்
துன்னெடுங் கொடிகளுந் தொகுதி யொன்றிலா
மின்னிடும் வெயிலிடு மீனின் வில்லிடும். |
| |
பொன் நெடுங்
குடைகளும், பொன் அம் பூண்களும்,
வன் நெடும் இரதமும் மணிக் கொடிஞ்சியும்,
துன் நெடுங் கொடிகளும், தொகுதி ஒன்று இலா,
மின் இடும்; வெயில் இடும்; மீனின் வில் இடும். |
பொன்னாற்
செய்த நெடிய குடைகளும், பொன்னாலாகிய அழகிய
அணிகளும், வலிமை வாய்ந்த நெடிய தேர்களும், மணிகள் பதித்த தேர்
மொட்டுக்களும், நெருங்கிய நெடிய கொடிகளும், தொகை ஒன்றுமின்றி,
மின்னலைப் பிறப்பிக்கும்; வெயிலைப் பரப்பும்; விண் மீன்கள் போல் கதிர் வீசும்.
| 55 |
அரியினம்
பூட்டிய வணிவி மானமும்
வரியினம் பூட்டிய விரத வையமும்
பரியினம் பூட்டிய திகிரி பான்மையும்
கரியினம் பூட்டிய தேருங் கண்டுளான். |
| |
|
அரி இனம் பூட்டிய
அணி விமானமும்,
வரி இனம் பூட்டிய இரத வையமும்,
பரி இனம் பூட்டிய திகிரி பான்மையும்,
கரி இனம் பூட்டிய தேரும் கண்டு உளான்.
|
சிங்கக்
கூட்டத்தைப் பூட்டிய அழகிய தேர்களும். புலிக் கூட்டத்தைப்
பூட்டிய தேர் வகைகளும், குதிரைக் கூட்டத்தைப் பூட்டிய தேர் வகைகளும்,
யானைக் கூட்டத்தைப் பூட்டிய தேர்களும் அவன் காணப் பெற்றான்.
விமானம், இரதம், திகிரி, வையம் என்பன தேருக்கு மறு பெயர்கள்.
இரண்டாவதடியில் இரு பெயர்கள் வந்தமையால், தேர் வகைகள் எனப்
பொருள் கொள்ளப்பட்டது.
|