| 56 |
பைம்மணிப்
பசுங்குடை பவளச் செங்குடை
யைம்மணிச் சிதங்குடை தரள வங்குடை
செய்ம்மணிக் குருங்குடை திங்கள் வெண்குடை
மைம்மணிக் கருங்குடை மயங்கித் தோன்றின. |
| |
பை மணிப் பசுங்
குடை, பவளச் செங் குடை,
ஐ மணிச் சிதம் குடை, தரள அம் குடை,
செய் மணிக் குரு குடை, திங்கள் வெண் குடை,
மை மணிக் கருங் குடை மயங்கித் தோன்றின. |
மரகதச்
சரங்கள் தொங்கவிட்ட பச்சை நிறக்குடைகளும், பவளச்
சரங்கள் தொடுத்த செந்நிறக் குடைகளும், அழகிய வைரச் சரங்கள்
தொங்கிய வெண்ணிறக் குடைகளும், முத்துச் சரங்கள் தொங்கவிட்ட
அழகிய குடைகளும், நன்கு செய்த மாணிக்கச் சரங்கள் தொடுத்த செந்நிறக்
குடைகளும், விண்மதி போன்ற வெண் கொற்றுக் குடைகளும், மை போன்ற
நீலமணிச் சரங்கள் தொங்கிய கருநீல நிறக் குடைகளும் தம்முட் கலந்து
அக்காட்சியில் தோன்றின.
பசுமை
+ மணி = பைம்மணி, குரு + குடை = குருங்குடை.
| 57 |
மயிலகல்
தோகையு மணியும் வில்செய
செயிலகல் நிழல்செயும் வெயில்செ யுங்குடை
துயிலக லொளிமணி தொடுத்த பான்மையால்
வெயிலகல் வளிசெயும் வெயில்செ யுங்கொடி. |
| |
மயில் அகல்
தோகையும் மணியும் வில் செய
வெயில் அகல் நிழல் செயும், செயில் செயும், குடை.
துயில் அகல் ஒளி மணி தொடுத்த பான்மையால்,
வெயில் அகல் வளி செயும், வெயில் செயும், கொடி. |
குடைகள்,
பகலவனின் வெயில் அகலுமாறு நிழலைத் தரும். அதே
நேரத்தில், தம் மேல் அணிந்துள்ள மயிலின் அகலமான பீலிகளும்
மணிகளும் ஒளி வீசுதலால், தாமே வெயிலையும் தரும். கொடிகள்,
வெயிலின் வெப்பத்தைப் போக்கக் கூடிய காற்றைத் தரும்; அதே நேரத்தில்,
தம் துணியில் அகலமாக ஒளியுள்ள மணிகளைத் தொடுத்த தன்மையால்,
தாமே வெயிலையும் தரும்.
'துகில்
என்பது, எதுகை நோக்கி, 'துயில்' எனத் திரிந்தது.
|