| 60 |
நண்ணில வனீகமே
நயந்து சூழ்வர
வொண்ணில வெறித்தபூ ணுலாவு மார்பினார்
தெண்ணில விமைத்தபொன் மகுடச் சென்னியா
ரெண்ணில குரிசில ரிரிந்து லாவுவார். |
| |
|
நள் நிலவு அனீகமே
நயந்து சூழ் வர,
ஒள் நிலவு எறித்த பூண் உலாவு மார்பினார்,
தெள் நிலவு இமைத்த பொன் மகுடச் சென்னியார்,
எண் இல குரிசிலர் இரிந்து உலாவுவார்.
|
செறிந்த
ஒளி கொண்ட படைகள் மகிழ்ந்து தம்மைச் சூழ்ந்து வர,
நிலாவொளியை வீசிய அணிகலன்கள் கிடந்தசையும் மார்பு கொண்டவராய்,
தெளிந்த ஒளி மின்னிய பொன் முடி அணிந்த தலையை உடையவராய்,
எண்ணிக்கையில்லாத அரசர்கள் அங்குமிங்கும் உலாவித் திரிவர்.
'இரிந்து
உலாவுவார்' என்பதனை, 'உலாவி இரிவார்' எனக் கொள்க.
| 61 |
மேகமொத்
திழிமத வேழ மீசிலர்
நாகமொத் தெழுந்ததேர் நவிர மீசில
ராகமொத் தகன்றுபா யயங்கள் மீசில
யூகமொத் தணியணி யுலவி யேகுவார். |
| |
|
மேகம் ஒத்து
இழி மத வேழம் மீ சிலர்;
நாகம் ஒத்து எழுந்த தேர் நவிரம் மீ சிலர்;
ஆகம் ஒத்து அகன்று பாய் அயங்கள் மீ சிலர்;
யூகம் ஒத்து அணி அணி உலவி ஏகுவார்.
|
மேகம்
பொழியும் மழைநீர் போன்று பாயும் மதங் கொண்ட
யானைகளின் மீது சிலர்; மலை போன்று எழுந்து நின்ற தேர்களின் உச்சி
மீது சிலர்; மனம் போன்று விரைந்து பாயும் குதிரைகள் மீது சிலர்; இவ்வாறு
படையின் வகுப்புப் போன்று வரிசை வரிசையாக உலாவிச் செல்வர்.
|