| 70 |
மின்னின
மெனநனை விரித்த கொம்பனார்
மன்னின மெனநிமிர் வயிரக் குன்றனார்
பொன்னினங் கண்டமேற் போவ தேதெனா
வென்னினம் புரக்குநீ யியம்பென் றானரோ. |
| |
|
"மின் இனம்
என நனை விரித்த கொம்பு அனார்,
மன் இனம் என நிமிர் வயிரக் குன்று அனார்,
பொன்னின் ஆங்கு அண்ட மேல் போவது ஏது எனா,
என் இனம் புரக்கும் நீ இயம்பு" என்றான் அரோ.
|
"மின்னற்
கூட்டம் போல் அரும்புகளை விரித்த பூங்கொம்பு போன்ற
மகளிரும், அரசர் கூட்டம் போல் நிமிர்ந்த வயிர மலைக்கு நிகரான
ஆடவரும், அழகிற் பொலிந்து அங்கே வான்மேல் போவது என்னவென்று,
என் யூத இனத்தை மீட்டுக் காக்க வந்துள்ள நீ எனக்குச் சொல்" என்று
திருமகனை வேண்டினான்.
| 71 |
மைத்திறத்
தொளித்தெதிர் வருவ தாதியே
மெய்த்திறத் தனைத்தையும் விழுங்குங் காட்சியா
னத்திறத் தவரெவ ரென்ன வாம்பல்வா
யித்திறத் தலர்ந்திவை யியம்பி னானரோ. |
| |
மைத் திறத்து
ஒளித்து, எதிர் வருவது ஆதியே,
மெய்த் திறத்து அனைத்தையும் விழுங்கும் காட்சியான்,
அத்திறத்து அவர் எவர் என்ன, ஆம்பல் வாய்
இத் திறத்து அலர்ந்து, இவை இயம்பினான் அரோ: |
இருளின்
தன்மையாக மறைந்து நின்று, எதிர் காலத்தில் வருவது
முதலாக, அனைத்தையும் உண்மைத் திறத்தோடு அறிந்து கடந்த நிறையறிவு
பூண்ட குழந்தைநாதன், அவ்வகைப்பட்ட அவர்களெல்லாம் யாவரென்று,
தன் ஆம்பல் மலர் போன்ற வாயை இவ்விதமாய்த் திறந்து, பின்வரும்,
இவற்றையெல்லாம் சொல்லலானான்:
|