| 73 |
இருள்பாய்ந்த
நிசிபருகு மிரவியெனச் சுடர்வெள்ள
மிமைத்துப்
பைம்பொற்
பொருள்பாய்ந்த முடிசூடி யாகிலப்புள் விருதேந்திப்
பொலிந்தாங்
குள்ளோர்
தெருள்பாய்ந்த மணிகொழித்த தெண்டிரைபாய்
செழுங்கழனி
திருவிற் பூப்ப
வருள்பாய்ந்த விரோமைநா டாண்டளிக்கும் பல்லரசர்க்
கரச
ரீட்டம். |
| |
|
"இருள் பாய்ந்த
நிசி பருகும் இரவி எனச்சுடர் வெள்ளம் இமைத்து, பைம்பொன்
பொருள் பாய்ந்தமுடி சூடி ஆகிலப்புள் விருது ஏந்திப் பொலிந்து ஆங்கு
உள்ளோர்,
தெருள் பாய்ந்த மணி கொழித்த தெண் திரை பாய் செழுங் கழனி திருவின்
பூப்ப,
அருள் பாய்ந்த இரோமை நாடு ஆண்டு அளிக்கும் பல்
அரசர்க்கரசர்
ஈட்டம்.
|
"இருள்
பரந்த இரவை விழுங்கி எழும் ஞாயிறு போல ஒளிப்
பெருக்கம் பொழிந்து, பசுமையான பொன்னும் மாணிக்கப் பொருள்களும்
கொண்டு அமைந்த முடியைச் சூடி, இருதலைப் பறவையைத் தம் விருதாக
ஏந்தி அழகுப் பொலிவுடன் அங்கே காணப்படுவோர், தெளிவு பொருந்திய
மணிகளைக் கரையில் ஒதுக்கிய தெளிந்த நீர் கொண்ட ஆறுகள் பாய்ந்து
வளம் தரும் செழுமையான வயல்களால் செல்வம் பெருக, இறைவனின்
அருள் பரந்த உரோமை நாட்டை ஆண்டு காக்கும் பல பேரரசர்களின்
கூட்டமாகும்.
இரோமை
- உரோமை.
| 74 |
வாமஞ்சா
லோடைநுதன் மாவெருத்த மீதிங்கண்
வருமிவ்
வேந்தர்
காமஞ்சால் விளைசெல்வங் கவருங்கா ரியநாட்டைக்
காக்கு மீட்ட
மேமஞ்சா லணிதியங்க வெறிவேல் கொண் டங்கண்பா
யிவுளி
மேலோர்
நாமஞ்சால் வெற்றிதர நண்ணார் தொழும் புலோனியநன்
னாட
ரீட்டம். |
|