பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 661

"வாமம் சால் ஓடை நுதல் மா எருத்த மீது இங்கண் வரும் இவ்
                                        வேந்தர்,
காமம் சால் விளை செல்வம் கவர் உங்காரிய நாட்டைக் காக்கும்
                                        ஈட்டம்.
ஏமம் சால் அணி தியங்க எறி வேல் கொண்டு அங்கண் பாய் இவுளி
                                        மேலோர்,
நாமம் சால் வெற்றி தர, நண்ணார் தொழும் புலோனிய நல் நாடர்
                                        ஈட்டம்.


     "அழகு நிறைந்த நெற்றிப்பட்டம் அணிந்த நெற்றியையுடைய
யானையின் பிடரியில் அமர்ந்து இங்கு வரும் இவ்வரசர்கள், ஆசைக்கு
நிறைவாக விளையும் செல்வங்களைக் கவர்ந்து கொள்ளும் உங்காரிய
நாட்டை ஆண்டு காக்கும் கூட்டம். இன்பம் நிறைந்த அணிகள் விளங்க,
எறியும் வேலைத் தம் கையில் தாங்கி, அங்கே பாயும் குதிரைமேல்
அமர்ந்திருப்போர், அச்சம் தரும் வெற்றியைக் கொள்ளவே, பகைவர்
பணிந்து தொழும் நல்ல புலோனிய நாட்டவர் கூட்டம்.

 
                 75
மேய்ந்தகதி ருயிர்த்திமைக்கும் விருதெனவேல்
     முன்னியிவண் மிடைந்த வீரர்
வாய்ந்தகதிர்ப் படையொன்னார் வணங்கயில்கொள்
     பாவரர்தம் மன்ன ரீட்டம்
பாய்ந்தகதி ருணுங்குடையாற் பாயிருளுண் முடிசூட்டிப்
     பகலங் குய்ப்போர்
தோய்ந்தகதி ரெறிமணிகொய் சுவேசியநா டினிதாள்வார்
     தொகுதி யீட்டம்.
 
'மேய்ந்த கதிர் உயிர்த்து இமைக்கும் விருது என வேல் முன்னி, இவண்
                                   மிடைந்த வீரர்,
வாய்ந்த கதிர்ப் படை ஒன்னார் வணங்கு அயில் கொள் பாவரர் தம்
                                   மன்னர் ஈட்டம்.
பாய்ந்த கதிர் உணும் குடையால் பாய் இருள் உண்முடி சூட்டிப் பகல்
                                   அங்கு உய்ப்போர்,
தோய்ந்த கதிர் எறி மணி கொய் சுவேசிய நாடு இனிது ஆள்வார்
                                   தொகுதி ஈட்டம்.