பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 663

                   77
மீன்முழுகுங் கொடித்திண்டேர் மீவரிமா விருதேந்தி
     வேய்ந்த வேந்தர்
கான்முழுகுங் குன்றஞ்சால் கவ்வுமுடி முராவியமே
     காக்கு மீட்ட
மூண்முழுகு மொளிமுழுகு முவணியைக்கொண்டு வந்திப்பா
     லுறைந்த கோமார்
தேன்முழுகும் பூம்பொழில் வாய்ச்சி லீமுகமார் சிலேசியமாள்
     செல்வ ரீட்டம்.
 
"மீன் முழுகும் கொடித் திண் தேர் மீ வரிமா விருது ஏந்தி வேய்ந்த
                                   வேந்தர்,
கான் முழுகும் குன்றம் சால் கவ்வு முடி முராவியமே காக்கும் ஈட்டம்.
ஊன் முழுகும் ஒளி முழுகும் உவணியைக் கொண்டு, உவந்து இப்பால்                                    உறைந்த கோமார்
தேன் முழுகும் பூம் பொழில் வாய்ச் சிலீமுகம் ஆள் செல்வர் ஈட்டம்.

     "வீண்மீன்கள் கீழாகும்படி மேலே பறக்கும் கொடியைக் கொண்ட
தேரின்மீது, வரிகளைக் கொண்ட வேங்கைப் புலியை விருதாக ஏந்தித்
தோன்றிய அரசர், காடுகளிடையே மறைந்து கிடக்கும் மலைகள் மிகுதியாகக்
கொண்டு முடிபோல் தோன்றும் முராவிய நாட்டை ஆளும் கூட்டம்.
பகைவர் ஊனில் புகுந்து ஒளி மிகுந்த வாளை விருதாகக் கொண்டு,
இப்பக்கம் மகிழ்ச்சியோடு தங்கி நிற்கும் அரசர்கள், தேன் நிறைந்து
வண்டுகளைக் கொண்ட பூஞ்சோலைகளை உடைய சிலேசிய நாட்டை
ஆளும் செல்வ மன்னர் கூட்டம்.

 
                 78
செற்றாறு கடந்தனில விசைகடந்த தேரெழுமச்
     செல்வ வல்லோர்
பற்றாறு கடந்திருசீர் பயந்திணையாப் புவேமியர்தம்
     பதிக ளீட்டஞ்
சொற்றாறு கடந்தசினஞ் சூட்டாளி யேந்தியவண்
     டோன்று மன்னர்
கற்றாறு கடந்துரத்துக் கருணைமிகுஞ் சசோனியமே
     காக்கு மீட்டம்.