பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 664

"செல் தாறு கடந்து, அனில விசை கடந்த தேர் எழும் அச்செல்வ
                                   வல்லோர்,
பற்று ஆறு கடந்து, இரு சீர் பயந்து, இணையாப் புவேமியர் தம்
                                   பதிகள் ஈட்டம்.
சொல் தாறு கடந்த சினம் சூட்டு ஆளி ஏந்தி, அவண் தோன்றும்
                                   மன்னர்
கல்தாறு கடந்து உரத்து, கருணை மிகும், சசோனியமே காக்கும்
                                   ஈட்டம்.


     "உயரத்தால் மேகத்தின் அளவையும் கடந்து, காற்றின் வேகத்தையும்
கடந்த தேர்மீது எழுந்த அந்தச் செல்வம் படைத்த வல்லவர்கள்,
ஆசைகளின் நெறியைக் கடந்து, அருட்செல்வம் பொருட் செல்வ மென்னும்
இருவகைச் செல்வமும் படைத்துத் தந்து, ஒப்பற்று விளங்கும் புவேமிய
நாட்டவர்தம் அரசர் கூட்டம். சொல்லின் அளவைக் கடந்த சினத்தைக்
கொண்டுள்ள யாளியை விருதாக ஏந்தி, அங்கே காணப்படும் அரசர்,
மனவுறுதியில் கல்லின் தன்மையையும் கடந்தவராயினும், அவ்வளவிற்குக்
கருணையும் மிகக் கொண்டுள்ள, சசோனிய நாட்டை ஆளும் கூட்டம்.

 
                  79
சினம்பழுத்துச் சீறிவிரி சிறைச்சிங்க முயர்த்திங்கட்
     செல்லுஞ் செல்வர்
தனம்பழுத்துத் திருவாய்ப்பத் தாழ்கடல்சூழ் வினேசியர்தந்
     தலைவ ரீட்ட
மனம்பழுத்துக் களியார்ந்த வடிவுற்றாங் கிவுளிமிசை
     வாய்ந்த மன்னர்
கனம்பழுத்துப் பனிவரைசூழ் கலைமிக்கெத் திறூரியரைக்
     காக்கு மீட்டம்.
 
"சினம் பழுத்துச் சீறி விரிசிறைச் சிங்கம் உயர்த்து இங்கண் செல்லும்
                                   செல்வர்,
தனம் பழுத்து, திரு வாய்ப்ப, தாழ் கடல் சூழ் வினேசியர் தம்
                                   தலைவர் ஈட்டம்.
மனம் பழுத்து, களி ஆர்ந்த வடிவு உற்று, ஆங்கு இவுளி மிசை
                                   வாய்ந்த மன்னர்,
கனம் பழுத்து, பனி வரை சூழ், கலை மிக்கு, எத்திறூரியரைக்
                                   காக்கும் ஈட்டம்