பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 665

     "சினம் மிஞ்சிச் சீறி விரித்த சிறகுகளைக் கொண்ட சிங்கத்தை
விருதாகத் தாங்கி, இங்கே செல்லும் அரசச் செல்வம் படைத்தோர், பொன்
மிகுந்தும், பிற செல்வங்கள் வாய்க்கப் பெற்றும், ஆழமான கடல் சூழ்ந்த
வினேசிய நாட்டவரின் தலைவர் கூட்டம். மனம் பூரித்து, களிப்பு நிறைந்த
வடிவம் கொண்டு, அந்கே குதிரை மீது அமர்ந்துள்ள அரசர்கள், கல்வியிற்
சிறந்தும், மேகம் மழை பொழிந்தும், பனி நிறைந்த மலைகள் சூழ்ந்துள்ள
எத்திறூரிய நாட்டவரை ஆளும் கூட்டம்.

 
                 80
மையொக்க மின்னலென மதகரிமீ தொளிவயிர      
     மணிக்குன் றன்னார்
பொய்யொக்க வளர்கருப்பம் பொழில்மொய்க்குஞ் சிசீலியமாள்
     பொருந ரீட்டம்
நெய்யொக்கக் கதிர்தும்மு நீடியவா ளேந்தியவந்
     நிருபர் தாமே
மெய்யொக்கத் திருவொடறம் விசித்தொளிகொள் நாப்புலியாள்
     வேந்த ரீட்டம்.
 

"மை ஒக்க மின்னல் என, மத கரிமீது ஒளி வயிர மணிக் குன்று
                                   அன்னார்,
பொய் ஒக்க வளர் கருப்பம் பொழில் மொய்க்கும் சிசீலியம் ஆள்
                                   பொருநர் ஈட்டம்
நெய் ஒக்கக் கதிர் தும்மும் நீடிய வாள் ஏந்திய அந்நிருபர் தாமே
மெய் ஒக்கத் திருவொடு அறம் விசித்து ஒளிகொள் நாப்புலி ஆள்
                                   வேந்தர் ஈட்டம்.


     "மேகத்தோடு கூடிய மின்னல் போல், மதயானை மீது ஒளியுள்ள
வயிரமணிக்குன்று போல் தோன்றும் அவர்கள், பொய்யைப்போல் நெடிதாக
வளரும் கரும்புச் சோலைகள் மொய்த்துக் கிடக்கும் சிசீலிய நாட்டை
ஆளும் அரசர் கூட்டம், பூசிய நெய்யோடு கூடிய ஒளியை வெளியிடும்
நெடிய வாளை ஏந்திய அவ்வரசரோ, மெய்யைப் போலச் செல்வத்தோடு
அறத்தையும் இணைத்துக் கட்டியமையால் புகழ் கொள்ளும் நாப்புலி
நாட்டை ஆளும் அரசர் கூட்டம்.