பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 666

                    81
கண்கடந்த கவின்காட்டிக் கமழ்கமலக் கண்ணியணி
     களிமார் பன்னார்
பண்கடந்த குரலனங்கண் படும்வயல்கொய் மாந்துவமாள்
     பரிவோ ரீட்டம்
விண்கடந்த பூங்கொடியை விரித்தார்க்குந் தேர்நடவி
     மிளிரச் செல்வோ
ரெண்கடந்த நிரைத்தீம்பா லினிதொழுகும் பார்மநிலத்
     திறைவ ரீட்டம்.
 
"கண் கடந்த கவின் காட்டி கமழ் கமலக் கண்ணி அணி களி மார்பு
                                   அன்னார்,
பண் கடந்த குரல் அனம் கண்படும் வயல் கொய் மாந்துவம் ஆள்
                                   பரிவோர் ஈட்டம்.
விண் கடந்த பூங்கொடியை விரித்து ஆர்க்கும் தேர் நடவி மிளிரச்
                                   செல்வோர்,
எண் கடந்த நிரைத் தீம் பால் இனிது ஒழுகும் பார்ம நிலத்து இறைவர்                                    ஈட்டம்.

     "கண்ணைக் கடந்த அழகிய தோற்றம் காட்டி, மணம் வீசும் தாமரை
மலர் மாலை அணிந்து மகிழும் மார்புடன் விளங்கும் அவர்கள்,
வீணையையும் வென்ற இனிய குரலுள்ள அன்னங்கள் துயிலும் வயல்களில்
கதிர் கொய்யும் மாந்துவ நாட்டை ஆளும் அன்பு கொண்ட அரசர் கூட்டம்.
மேகத்தையும் கடந்த அழகிய கொடியை விரித்து முழங்கும் தேரைச்
செலுத்தி ஒளி விளங்கச் செல்லும் அவர்களோ, எண்ணிக்கையற்ற பசு
மந்தைகள் தரும் இனிய பால் இனிதாகப் பாய்ந்தோடும் பார்ம நாட்டை
ஆளும் அரசர் கூட்டம்.

 
                     82
திரைபுறங்காண் கடற்பவளச் சிலுவைவிரு துயர்ந்திவுளி
     செலுத்து மன்னார்
புரைபுறங்காண்டு டுகிர்ந்கொடியே புணரியிற்கொய் சேனுவமாள்
     பொருந ரீட்டம்
விரைபுறங்காண் டொடைமார்பில் வேண்புறவு கதிர்பரப்ப
     வேய்ந்த வன்னார்
வரைபுறங்காண் கோநதிசார் வளம்பெறவாழ் சாவோய
     மன்ன ரீட்டம்.