பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 667

"திரை புறம் காண் கடல் பவளச் சிலுவை விருது உயர்த்து, இவுளி
                              செலுத்தும் அன்னர்,
புரை புறம் காண் துகிர்க் கொடியே புணரியில் கொய் சேனுவம்
                              ஆள் பொருநர் ஈட்டம்.
விரை புறம் காண் தொடை மார்பில் வெண் புறவு கதிர் பரப்ப

                              வேய்ந்த அன்னார்.
வரை புறம் காண் கோநதி சார் வளம் பெற வாழ் சாவோய
                              மன்னர் ரீட்டம்.


     "அலையைப் புறத்தே கொண்டுள்ள கடலில் தோன்றும் பவளத்தால்
அமைந்த சிலுவை விருதை ஏந்தி, குதிரைகளைச் செலுத்தி வரும் அவர்கள்,
குற்றம் யாவும் வென்று நீக்கிய பவளக் கொடிகளைக் கடலில் கொய்து
எடுக்கும் சேனுவ நாட்டை ஆளும் அரசர் கூட்டம். பிற மணங்களை
விஞ்சும் மணங்கொண்ட மாலை அணிந்த மார்பில் வெண் புறா விருதாகக்
கதிரொளி பரப்ப அணிந்துள்ள அவர்களோ, மலைப் பக்கம் காணும்
பேராற்றின் சார்பினால் வளம் பெற்று வாழும் சாவோய நாட்டை ஆளும்
மன்னர் கூட்டம்.

 
                    83
மீனலங்கொள் மணித்திண்டோள் வீங்கியரித் தேரேறி
                     வேய்ந்தாங் கன்னார் வானலங்கொள்
படமுயிர்பெற் றென்னவளர் கல்லியமாள்
                     மன்ன ரீட்டந்
தேனலங்கொள் ளலங்கல்வேற் சேவகர்சூழ் தாங்குலவுந்
                     திண்டோர்ச் செல்வோர்
நீனலங்கொள் கடல்பிரித்த நிலஞ்சேர்த்தா ளிசிப்பாஞ
                     நிருப ரீட்டம்.
 
"மீன் நலம் கொள் மணித் திண் தோள் வீங்கி, அரித் தேர் ஏறி,
                         வேய்ந்து ஆங்கு அன்னா
வான் நலம் கொள் படம் உயிர் பெற்று என்ன வளர் கல்லியம்
                         ஆள் மன்னர் ஈட்டம்.
தேன் நலம் கொள் அலங்கல் வேல் சேவகர் சூழ் தாங்கு, உலவும்
                         திண் தேர்ச் செல்வோர்,
நீல் நலம் கொள் கடல் பிரித்த நிலம் சேர்த்து ஆள் இசிப்பாஞ
                         நிருபர் ஈட்டம்.

     "விண்மீனின் அழகு கொண்ட மணி வளை அணித்த வலிமையான
தோள் திரண்டு தோன்ற, சிங்கம் பூட்டிய தேர்மீது ஏறி, அங்கே தோன்றும்