அவர்கள், வானுலகின்
அழகிய படம் உயிர் பெற்றாற் போல் வளர்ந்து
சிறக்கும் கல்லிய நாட்டை ஆளும் அரசர் கூட்டம். தேனின் நலத்தோடு
கூடிய மாலை அணிந்த வேலைச் சேவகர் சுற்றிலும் தாங்கி வர, உறுதியான
தேரில் உலாவும் இச் செல்வரோ, நீல நன்னிறங் கொண்ட கடல் பிரித்த
தீவு நிலத்தையும் சேர்த்து ஆளும் இசிப்பாஞ நாட்டு அரசர் கூட்டம்.
84 |
போரெல்லை
கடந்துகளும் பொற்கலின மாவேறிப் பொலியக்
கோமார்
சேரெல்லை வாழ்வுறச்சீ ரெல்லையில விபெரியமாள் செல்வ
ரீட்ட
நேரெல்லை யில்லையென நிமிர்கவிகை நெடுஞ்செங்கோற்
கொற்ற மன்னர்
பாரெல்லை யல்லதில படரிலுசித் தானியமாள் பரிவோ
ரீட்டம். |
|
"போர்
எல்லை கடந்து உகளும் பொற் கலினமா ஏறிப் பொலி அக்
கோமார்,
சேர் எல்லை வாழ்வு உறச் சீர் எல்லை இல விபெரியம் ஆள்
செல்வர்
ஈட்டம்.
நேர் எல்லை இல்லை என, நிமிர் கவிதை நெடுஞ் செங்கோல்
கொற்ற
மன்னர்,
பார் எல்லை அல்லது இல படர் இலுசித்தானியம் ஆள் பரிவோர்
ஈட்டம்.
|
"போரின்
கண் எல்லை கடந்து பாயும் பொற்கடிவாளம் பூண்ட
குதிரைகளில் ஏறிப் பொலிவுடன் விளங்கும் அவ்வரசர்கள், தம்மைச் சேர்ந்த
எல்லையிலுள்ள பிறநாட்டாரும் வாழ்வு பெறுமாறு எல்லையற்ற செல்வம்
படைத்த விபெரிய நாட்டை ஆளும் செல்வ மன்னன் கூட்டம். தமக்கு நிகர்
உலக எல்லை யெங்கும் இல்லையென நிமிர்ந்த குடையும் நெடிய
செங்கோலும் தாங்கிய இவ் வெற்றி வேந்தரோ, உலக எல்லையே தனக்கு எல்லையென பரந்து
கிடக்கும் இலுசித் தானிய நாட்டை ஆளும் அன்பு
கொண்ட அரசர் கூட்டம்.
85 |
கொக்கொக்குந்
தேரி னெழீஇக் குணக்கொக்குஞ் சுடரொக்கக்
குணத்தக்
கோமா
ரிக்கொக்கு மலர்மணிசே ரிழையொக்கு மங்கிலியதீ
விறைவ
ரீட்டம் |
|